சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

பிரசவத்திற்கு தயாரான தனம்.. மூர்த்தியால் தாமதமாகும் ஆபரேஷன்

Pandian Stores: விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன், தம்பி பாசத்தைக் கொண்டு அழகாக தொடங்கப்பட்ட இந்தத் தொடர் இப்போது அலுப்பு தட்டும் வகையில் சென்று கொண்டிருக்கிறது. நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் தனத்திற்கு புற்று நோய் இருப்பதால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியில் எடுக்க வேண்டும்.

ஆனால் தனம் இதற்கு மறுப்பு தெரிவித்து வந்தார். முல்லைக்கு இந்த விஷயம் தெரிந்த உடன் உடனடியாக மருத்துவரை அணுகி ஆபரேஷனுக்கு ஏற்பாடு செய்து விட்டார். பாண்டியன் குடும்பத்தில் அண்ணன், தம்பி நால்வருக்கும் தனத்திற்கு இருக்கும் பிரச்சனை தெரியாது. ஆனால் தனத்திற்கு இப்போது ஆர்ப்ரேஷன் செய்ய வேண்டும் என்ற விஷயம் மட்டும் சொல்லி இருக்கிறார்கள்.

Also Read : இறுதிக்கட்டத்தை நெருங்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ்.. முல்லையால் ஏற்பட போகும் விடிவுகாலம்

எதற்காக தனம் எப்போதும் செக்கப்புக்கு செல்லும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்நிலையில் எதுக்கு ஆப்ரேஷன் என்றவுடன் பதறிப் போன மூர்த்தி இந்த மருத்துவமனையில் எனக்கு நம்பிக்கை இல்லை வேறு ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லலாம் என்று கூறுகிறார்.

ஆனால் இந்த டாக்டருக்கு தான் தனத்திற்கு உள்ள பிரச்சனை தெரியும் என்பதால் மீனா மற்றும் முல்லை இருவருமே தனத்தை இதே ஹாஸ்பிடலில் சேர்த்து பிரசவம் பார்க்க வேண்டும் என்பதால் ஒரு திட்டம் திட்டுகிறார்கள். அதாவது முல்லை ஜீவாவிடமும், மீனா கதிரிடமும் சமாதானப்படுத்தும் படியாக பேசுகிறார்கள்.

Also Read : ஒத்த கைரேகையால் மொத்தத்தையும் காலி செய்த ஜீவானந்தம்.. ஒன்னும் புரியாமல் நிக்கதியான குணசேகரன்

அதோடு மட்டுமல்லாமல் மீனா மூர்த்தியிடம் அக்கா மீது உங்களுக்கு அக்கறையே இல்லை என்று பேசி சம்மதம் வாங்க முற்படுகிறார். ஆனால் மூர்த்தி தான் எடுத்த முடிவில் உறுதியாக இருப்பதால் தனத்தின் ஆபரேஷன் தாமதமாகி கொண்டிருக்கிறது. அதன் பிறகு எப்படியும் மூர்த்தியை சம்மதிக்க வைத்து விடுவார்கள்.

இந்நிலையில் ஆபரேஷன் நல்லபடியாக முடிந்த குழந்தை பிறந்த உடன் தான் தனத்திற்கு இருக்கும் பிரச்சனை பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு தெரிய வர இருக்கிறது. அதன் பிறகு சிகிச்சையில் இருந்து தனம் மீண்டு வருவாரா என்பதுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் கிளைமேக்ஸாக அமைய இருக்கிறது.

Also Read : பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் இப்படி ஒரு களவாணியா? குறுக்கு புத்தியால் சுக்கு நூறாகும் மானம் மரியாதை

- Advertisement -

Trending News