ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

கட்டின பொண்டாட்டிக்காக தெருத்தெருவாக அலையும் எம்டன் மகன்.. நடுரோட்டில் கதறிய மருமகள்

Pandian Stores 2 serial: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் எதிர்பாராத விதமாய் கதிர்ராஜி திருமணம் நடந்தது. ஆனால் கல்யாணம் ஆன நாளிலிருந்து கதிர் மீது அடுக்கடுக்காய் அபாண்டமாய் பழி போடுகின்றனர். இதைப் பார்க்க முடியாத ராஜி, எப்படியாவது கண்ணன் எடுத்து சென்ற நகை, பணத்தை அவரிடம் இருந்து மீட்க பார்க்கிறார்.

இதற்காக கண்ணன் வீட்டிற்கு போகிறார். ஆனால் அங்கு இல்லை, அவருடைய நண்பர் மூலம் திருச்சிக்கு போனதாக தெரிய வருகிறது. அங்கு சென்று பார்த்தாலும் அவர் துபாய் போனதாக கண்ணனின் நண்பர்கள் சொல்லுகின்றனர். நாடு விட்டு நாடு போன கண்ணனை எப்படி தேடி கண்டுபிடிப்பது? அவரிடம் இருக்கும் நகை பணத்தை எப்படி வாங்குவது? என தெரியாமல் நடுரோட்டில் ராஜி புலம்பி அழுகிறார்.

அது மட்டுமல்ல ராஜி, திருச்சிக்கு வந்தது பாண்டியன் குடும்பத்தில் யாருக்குமே தெரியாது. அவர்களை தொலைபேசியின் மூலம் தொடர்பு கொண்டு விஷயத்தை சொல்லலாம் என பார்த்தால் யாருடைய நம்பருமே ராஜிக்கு தெரியல.

Also Read: புருஷனை வச்சு வீட்டை ரெண்டாக்க தந்திரம் பண்ணும் ரேணுகா.. தர்ஷினியை காப்பாற்றிய ஜீவானந்தம்

ராஜியால் நிலைகுலைந்த குடும்பம்

இந்த நிலைமை யாருக்குமே வரக்கூடாது. பகைவரின் வீட்டில் மருமகளானது மட்டுமல்லாமல், இப்போது செஞ்ச தப்பிற்காக ஒவ்வொரு நாளும் கூனி குறுகுகிறார். ஆனா ராஜியை வீட்டில் காணும் என தெரிந்ததும் பாண்டியன் குடும்பமே பதைப்பதைத்து தெருத் தெருவாய் தேடி அலைகின்றனர்.

என்னதான் பிடிக்காத மனைவியாக இருந்தாலும் கதிர், ரொம்பவே கலங்கிப் போனார், அவரும் ராஜியை தேடுகிறார். அதன் பின் ராஜியை பஸ் ஸ்டாண்டில் பார்த்து நாலு திட்டுத்திட்டு வீட்டுக்கு கூட்டிட்டு வருவார். அவர் கண்ணனை தான் தேடி சென்றார் என தெரிந்ததும் கதிர் இனிமேல் ராஜியிடம் எரிஞ்சு எரிஞ்சு விழுவதை கொஞ்சம் குறைத்துக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது.

Also Read: ரோகினிக்கு மாமியாரும் கணவரும் சேர்ந்து கொடுக்கும் டார்ச்சர்.. முத்துவையும் மீனாவையும் பிரிக்க பிளான் பண்ணிய மச்சான்

- Advertisement -

Trending News