வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

பாண்டியனின் குடும்பத்திற்காக மருமகள் எடுக்கும் ரிஸ்க்.. பெரிய தலைவலியாய் மாறிய தம்பிகள்

Pandian Stores 2 serial: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இரண்டு தம்பிகள் அடுத்தடுத்து காதல் திருமணம் செய்து கொண்டதால், அதுவே இப்போது பாண்டியனின் மூத்த மகனான சரவணன் கல்யாணத்திற்கு இடஞ்சல் ஆகிவிட்டது. எங்கு போனாலும் அண்ணனுக்கு கல்யாணம் செய்யாமல் எப்படி இரண்டு தம்பிகளுக்கு கல்யாணம் செய்து வைத்தீர்கள்? என்று பாண்டியனை கேள்வி மேல கேள்வி கேட்கின்றனர்.

ஒரு கட்டத்தில் பார்க்கிற சம்மந்தம் எல்லாம் கைநழுவி போகிறது. இதனால் கோமதி தன்னுடைய மருமகள் மீனாவிடம் புலம்புகிறார், மீனாவும் அவருடைய அலுவலகத்தில் இருக்கக்கூடிய ஒருவரிடம் இதைப் பற்றி சொல்கிறார். மீனாவுடன் வேலை பார்க்கும் அவரும் தன்னுடைய மகளுக்கு திருமண ஏற்பாடுகளை செய்வதால், அவரையே சரவணனுக்கு பேசி முடிக்கலாம் என்று மீனா நினைக்கிறார்.

உடனே பெண்ணின் அம்மாவிடம் மீனா சரவணனை பற்றி எல்லாம் சொல்கிறார். அது மட்டுமல்ல மீனா காதல் திருமணம் செய்ததெல்லாம் அவருக்கு ஏற்கனவே தெரியும் என்பதால், அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இப்போது பாண்டியன் குடும்பமே சரவணனுக்கு திருமணம் செய்து வைக்க தான் கடும் முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறது.

Also Read: ரோகிணி மூஞ்சியில் கரிய பூசிய ஒட்டுமொத்த குடும்பம்.. பார்லர் விஷயத்தை வைத்து மிரட்டும் முத்து

சரவணனுக்காக மீனா இறங்கி செய்த காரியம்

மீனாவும் இப்போது ரொம்பவே ரிஸ்க் எடுத்து தன்னுடன் வேலை பார்ப்பவரின் பொண்ணை பேசி முடிக்கிறார். அது மட்டுமல்ல சரவணனுக்கு நான் கேரண்டி என்றும் அவர்களிடம் வாக்கு கொடுக்கிறார். மறுபுறம் பாண்டியனின் இன்னொரு மருமகளான ராஜி தன்னால் தான் குடும்பத்தில் குழப்பம் ஏற்படுகிறது என வீட்டை விட்டு கிளம்புகிறார்.

அவர் தொலைத்த பணம் மற்றும் நகைகளை எப்படியாவது கண்ணனிடம் வாங்க பார்க்கிறார். ஆனால் கண்ணன் தங்கியிருக்கும் வீட்டை நான்கு நாளைக்கு முன்பே காலி செய்துவிட்டு கிளம்பி விட்டார். பின்பு அவருடைய நண்பரை பிடித்து எப்படியோ அவர் திருச்சியில் இருப்பதை ராஜி கண்டுபிடிக்கிறார்.

தன்னுடைய தோழி பூர்ணியின் துணையுடன் திருச்சி செல்லும் ராஜி, எப்படியாவது பணம் நகையை கண்ணனிடம் இருந்து வாங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். ஆனால் கண்ணனோ, பணம் நகைகளை சுருட்டிக் கொண்டு துபாய் கிளம்பி போக திட்டமிட்டதை அவருடைய நண்பர் மூலம் ராஜுக்கு தெரிய வருகிறது.

காலேஜ் முடிந்தும் ராஜி வீட்டுக்கு வராததால் பதறிப்போன கோமதி, கதிரிடம் சொல்ல அவரும் ராஜியை தெருத்தெருவாக தேட ஆரம்பிக்கிறார். ‘ஒருத்தர் இருக்கிறப்ப அவருடைய அருமை தெரியாது, இல்லாதப்ப தான் தெரியும்’ என்பது போல, கீரியும் பாம்புமாய் இருந்தாலும் ராஜியை காணும் என்பதும் கதிர் பதறிப் போகிறார். இனிமேல் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கதிர்- ராஜி இருவரின் காதல் ட்ராக்கை ஓட்டி டிஆர்பி-யை விஜய் டிவி தட்டி தூக்க பார்க்கிறது. இவர்கள் முதல் சீசனில் செம ரொமான்டிக் ஜோடியான கதிர்- முல்லையை ஓவர் டேக் செய்வார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Also Read: குணசேகரனுக்கு விழுகிற ஒவ்வொரு அடியும் மரண அடி.. தர்ஷனியை கடத்தியதால் கதிர் செய்யப் போகும் சம்பவம்

- Advertisement -

Trending News