வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

வெல்லம் தின்பது ஒருத்தன், விரல் சூப்புவது ஒருத்தனா?. கதிரை கோர்த்துவிட்டு வேடிக்கை பார்க்கும் ராஜி

Vijay TV- Pandian Stores 2 serial Today Episode: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கதிர்- ராஜி திருமணத்தால் இப்போது பாண்டியன் குடும்பத்தில் பெரிய பூகம்பமே வெடிக்கிறது. காதல் திருமணம் செய்து கொண்டதை கூட பாண்டியன் தப்பு சொல்லவில்லை, ஆனா ராஜி வீட்டில் இருந்து திருடிட்டு வந்ததாக சொல்லப்படுகிற நகை, பணத்தை மட்டும் திருப்பிக் கொடுக்க சொல்கிறார் பாண்டியன்.

அப்பனுக்கு ஏதாவது ஒரு நல்லது செய்யணும் என்று நினைத்தால், இதை மட்டும் செய்யும்படி பாண்டியன் கதிரிடம் கேட்கிறார். வீட்டில் இருப்பவர்களும் பாண்டியன் சொல்வது போல் கதிரை செய்ய சொல்கின்றனர். ‘அதெல்லாம் செலவாகிவிட்டது’ என கதிர் ஏற்கனவே சொல்லிவிட்டார். இருந்தாலும் அவ்வளவு பல நகையை செலவு செய்யும் அளவுக்கு அப்படி என்ன தேவை வந்தது என்ற கேள்வி எழுகிறது.

ஒருவேளை பணம் கூட செலவழிந்து இருந்தால், அந்த பணத்தை பாண்டியனே மகனுக்காக கொடுக்க முன் வருகிறார். நகையை மட்டும் திருப்பிக் கொடுக்கும்படி கதிரிடம் கேட்கிறார். ‘வெல்லம் தின்பது ஒருத்தன், விரல் சூப்புவது இன்னொருத்தன்’ என்பது போல் கதிர் ராஜியின் நகை பணத்தை எடுக்கவே இல்லை. வேறொருவன் ராஜியை காதலித்து ஏமாற்றிய கொடுமைக்காக தாலி கட்டுனது மட்டும் தான் கதிரின் குற்றம்.

Also Read: முத்துவிடம் இருந்து எஸ்கேப் ஆகிய ரோகினி.. மாட்டிக்கொண்டு முழிக்கும் மீனா, மனோஜ்

எம்டனை தூக்கி எறிந்த கதிர்

ஆனால் இப்போது பாண்டியன், எடுக்காத பண நகையை கொடுக்கும்படி கதிரிடம் கேட்கிறார். கதிர் தன்னுடைய தந்தையை சமாளிக்க முடியாமல் திணறிய போது ராஜி, எல்லா உண்மையும் சொல்ல பார்க்கிறார். ஆனால் கதிர் உடனே, பாண்டியனின் வாயை அடைப்பதற்காகவே அவரை எடுத்தெறிந்து பேசுகிறார். ‘இது ஒன்றும் அவருடைய பணம் இல்லையே! பிறகு எதற்கு இவர் கேள்வி கேட்கிறார்.

ஊர்க்காரர்கள் இவருடைய பையன் திருடன் என சொன்னால், நான் அவருடைய பையனே இல்லைன்னு சொல்லிருங்க. இனிமேல் எந்த பிரச்சினையும் உங்களுக்கு என்னால் ஏற்படாது. என்னிடம் மட்டும் இனிமேல் கேள்வி கேட்காதீர்கள். என்னுடைய விஷயத்தில் மூக்கை நுழைக்காதீர்கள். எடுத்த பணம் நகையை என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியும். நீங்கள் எந்த அட்வைஸும் இனிமேல் எனக்கு பண்ண வேண்டாம்’ என்று பாண்டியனை கதிர் மனம் நோகும் படி பேசுகிறார்.

யாரோ மாதிரி பெத்த பிள்ளையே பேசுறானே! என்று பாண்டியனும் மனம் உடைந்து போய்விட்டார். இவ்வளவு பிரச்சினைகள் எல்லாம் வரும் என்று தெரியாமல் கோமதி பொம்மை கல்யாணம் நடத்துவது போல் கொஞ்சம் கூட பொருத்தமே இல்லாத கதிர்- ராஜிக்கு அவசர அவசரமாக திருமணம் செய்து வைத்துவிட்டார். இப்போது ஒவ்வொரு நாளும் பாண்டியன் குடும்பத்தில் ஏதாவது ஒரு பிரச்சனை வெடித்துக் கொண்டே இருக்கிறது. கடைசி வரை நடந்து உண்மையை யாரிடமுமே சொல்லாமல் சஸ்பென்ஸ் ஆகவே வைத்து இன்னும் ஒரு வருடத்திற்கு இதை வைத்தே சீரியலை இழுத்தடிக்க போகின்றனர்.

Also Read: பிள்ளை இல்லாத வீட்டில் துள்ளி விளையாடும் விஜயா.. சைடு கேப்பில் ரொமான்ஸில் புகுந்த முத்துவின் அப்பா

- Advertisement -

Trending News