வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

பாக்கியா வீட்டிற்கு பொண்ணு பார்க்க வரும் பழனிச்சாமி.. கூலும் குடிக்கணும் மீசையில் மண்ணு ஓட்டக்கூடாது எப்படி கோபி சார்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி தொடர் தற்போது ரணகளமாக போய்க்கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் கோபியின் அம்மா எப்படியாவது ராதிகாவை வீட்டை விட்டு வெளியில் அனுப்பி விடனும் என்று முயற்சி செய்கிறார். இன்னொரு பக்கம் ராதிகா, கோபியை முழுவதும் தன் வசப்படுத்திக் கொண்டு பாக்யாவை வீட்டை விட்டு அனுப்ப வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கிறார்.

இதற்கிடையில் எனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அப்பாவியாக முழித்துக் கொண்டிருக்கும் கோபியின் பரிதாப நிலை. பாக்கியாவை வேண்டாமென்று உதறித்தள்ளி விட்டு ராதிகா பின்னாடி போன கோபி இப்ப ஏன் பாக்கியா மேல திடீரென்று கரிசனம். பாக்கியா எப்படி போனால் என்ன.

Also read: பிரபல நடிகரை பதம் பார்க்க தயாரான பாக்கியலட்சுமி சீரியல் நடிகை.. நெட்டிசன்கள் பேச்சுக்கு பதிலடி

ஆனால் கோபியின் அடி மனதில் பாக்கியா தன்னுடைய மனைவி என்ற நினைப்பு அவ்வப்போது வந்து போயிட்டு இருக்கு. அதனால் தான் பாக்கியா என்ன செய்கிறார் ஏது செய்கிறார் என்று பின்னாடியே போய் நோட் பண்ணிக்கிட்டு இருக்காரு. கூலும் குடிக்கணும் மீசையில் மண்ணு ஓட்டக்கூடாது என்று நினைத்தால் எப்படி கோபி சார்.

அதாவது பழனிச்சாமி அம்மாவிடம் பாக்கியா சொன்னது கூடிய சீக்கிரத்தில் இவருக்கு திருமணம் நடக்கும் அதற்கு நான் பொறுப்பு என்று. அதற்கேற்றார் போல் பாக்கியாவின் மாமனாரின் சொந்தக்கார பொண்ணு ஊரில் இருந்து வராங்க என்று சொல்லும்போது கோபி கேட்கவில்லை. அதற்குப்பின் பாக்கியா, நீங்க பொண்ணு பார்க்க வரீங்க என்று பேசுவதை கேட்கிறார்.

Also read: மட்டமான கதையை வைத்து உருட்டும் பாக்கியலட்சுமி.. பார்க்கவே கன்றாவியா இருக்கும் ராதிகாவின் செயல்

எந்த வயசுல வேணாலும் கல்யாணம் பண்ணிக்கலாம் ஏன் சார் நாம் இன்னொரு கல்யாணம் பண்ணிக்க கூடாது. நீங்க பொண்ணு பாக்க வர்றீங்க கல்யாணம் பண்ணுறீங்க போறீங்க என்று சொல்லும்போது கரெக்டான நேரத்தில் கோபி வந்து கேட்டு வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு இந்த கன்றாவியெல்லாம் யாரும் கேட்க மாட்டீங்களா என்று புலம்புகிறார்.

அதற்கு ஏற்றார் போல் வீடு முழுவதும் அலங்காரம் செய்து கொண்டு இருக்கையில் கோபி அதை பார்த்து கடுப்பாகி இனியாவிடம் கேட்க, அதற்கு இனியா என்னவென்று முழுசாக சொல்லாமல் பழனிச்சாமி அங்கிள் நம்ம வீட்டுக்கு பொண்ணு பாக்க வராங்க என்று சொல்கிறார். இதை கேட்ட கோபி கண்டிப்பா ஏதோ ரணகளம் பண்ண போகிறார். ஆக மொத்தத்தில் கோபியோட நடிப்பு அல்டிமேட்.

Also read: கதிரை கதற கதற வச்சு செய்த நந்தினி.. ஜீவானந்தம் மாஸ் என்ட்ரியால் குணசேகரனுக்கு ஆப்பு

- Advertisement -

Trending News