இந்த வருஷம் வேண்டாம், அடுத்த வருஷம் பார்த்துக்கலாம்.. விஜய் சேதுபதியின் பாலிவுட் கனவை சுக்குநூறாக்கய நடிகர்

விஜய் சேதுபதி நடிப்பில் வருஷத்திற்கு குறைந்தபட்சம் 6 படங்களாவது வெளியாகும். ஏனென்றால் தன்னை நாடிவரும் இயக்குனர்கள் அனைவருக்குமே கால்ஷீட் கொடுத்து எந்த கதாபாத்திரம் ஆக இருந்தாலும் நடித்து வருகிறார். தற்போது தென்னிந்திய மொழி படங்களைத் தொடர்ந்த பாலிவுட்டிலும் விஜய் சேதுபதி கால் பதித்துள்ளார்.

அங்கு இரண்டு, மூன்று படங்களை கைவசம் வைத்துள்ள விஜய் சேதுபதி கத்ரீனா கைப்புடன் இணைந்த மெர்ரி கிறிஸ்மஸ் படத்தில் நடித்த வருகிறார். இதில் சஞ்சய் கபூர், வினய் பாடக் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இப்படத்தை ஸ்ரீராம் ராகவன் இயக்குகிறார்.

Also Read :கமலின் இடத்தை பிடிக்க விஜய் சேதுபதி போட்ட ஸ்கெட்ச்.. 35 வருடத்திற்கு முன் வெளிவந்த படத்தை கையில் எடுக்கிறார்

இந்நிலையில் இந்த ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு மெர்ரி கிறிஸ்மஸ் படம் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் இந்த வருஷம் வேண்டாம், அடுத்த வருஷம் பார்த்துக்கலாம் என விஜய் சேதுபதியின் பாலிவுட் கனவை தயாரிப்பாளர் சுக்குநூறாக்கியுள்ளார்கள்.

ஏனென்றால் அடுத்த வருடம் அதாவது 2023 டிசம்பரில் மெர்ரி கிறிஸ்மஸ் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார்கள். இதற்கு முக்கிய காரணம் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் தான். ஏனென்றால் இவரின் சர்க்கஸ் மற்றும் டைகர் ஷெராப்பின் கண்பத் படமும் மெர்ரி கிறிஸ்மஸ் வெளியாகும் தேதியில் ரிலீஸ் ஆக உள்ளது.

Also Read :ஜவ்வாக இழுக்கும் இயக்குனர்.. உங்க சவகாசம் வேண்டாம் என எஸ்கேப் ஆன விஜய் சேதுபதி

ஏற்கனவே இந்த டாப் இரண்டு ஹீரோக்களின் படங்கள் வெளியாவதால் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய சண்டை நிலவும். இந்த இரண்டு படங்கள் தான் வசூலை வாரிக் குவிக்கும். இத்தகைய சூழலில் மெர்ரி கிறிஸ்மஸ் படம் வெளியானால் ரசிகர்களை கவருமா என்பது கேள்விக்குறிதான்.

மேலும் பாலிவுட்டில் டாப் ஸ்டாரான ரன்வீர் சிங் படத்திற்கு போட்டியாக விஜய் சேதுபதியின் அறிமுக படத்தை வெளியிட்டால் வசூல் ரீதியாக மெர்ரி கிறிஸ்மஸ் படம் மிகப்பெரிய பாதிப்பு அடையும். இதை கருத்தில் கொண்டு அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் மெர்ரி கிறிஸ்துமஸ் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

Also Read :வேதாவை மிஞ்சும் கேங்ஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி, கௌதம் மேனன்.. மைக்கேல் டீசர் விமர்சனம்

- Advertisement -spot_img

Trending News