நெருங்கிய வட்டாரங்களும் விஜய் சேதுபதின்னா தெரித்து ஓடும் பரிதாபம்.. விவரம் தெரியமால் மிஸ்கினும் செய்யும் அக்கப்போர் 

Vijayasethupathi Market: சமீப காலமாக விஜய் சேதுபதி படம் என்றாலே வாங்குவதற்கு  ஆளில்லாமல் காத்து வாங்குகிறது. ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்தவருக்கு இன்று இப்படி ஒரு நிலைமை. விஜய் சேதுபதி படம் ஹிட் ஆகி ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது.  வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படம் 2023 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் ஹிட் ஆனது. அதன் பின் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இவருக்கு எந்த படமும் ஓடவில்லை.

மெரி  கிறிஸ்துமஸ், மும்பைகார் என இவர் நடித்த அடுத்தடுத்த படங்கள் ப்ளாப்பானது. அதனால் இவருடைய மார்க்கெட் இப்பொழுது அதல பாதாளத்தில் தொங்கி வருகிறது. தற்போது  விஜய் சேதுபதி நடித்துக் கொண்டிருக்கும் படம் டிரெயின். இந்த படத்தை மிஸ்கின் ஒரு வருடமாக இயக்கி வருகிறார். இப்பொழுது இந்த படமும் வியாபாரமாகாமல் கிடப்பில் கிடைக்கிறது.

மிஷ்கின் டிரெயின் படத்தை கலைப்புலி எஸ் தானு தயாரிக்கிறார். ஆரம்பத்தில் இந்த  படத்தை 24  கோடிகளில் முடித்து கொடுக்கிறேன் என மிஸ்கின் கூறினாராம். ஆனால் இப்பொழுது 40 கோடிகள் வரை வரை பட்ஜெட் எகிறி விட்டதாம். படம் வியாபாரமும் ஆகவில்லை,பட்ஜெட்டும் அதிகமாகி விட்டது , இதனால் தானு கடும் மன உளைச்சலில் இருந்து வருகிறாராம்.

விவரம் புரியாத மிஸ்கினும் செய்யும் அக்கப்போர் 

இந்த விபரம் புரியாமல் மிஸ்கின் படத்தின் பட்ஜெட்டை அதிக அளவில் ஏற்றி விட்டார். இப்பொழுது வாங்கிய பணத்திற்காக  பெரும்தொகையை வட்டி கட்டி வருகிறார் தானு. படம் ஓடவில்லை என்றால் தானு பெருமளவு நஷ்டப்பட்டு விடுவார். இதனால்  மிஸ்கினிடம் சீக்கிரம் படத்தை முடித்து தரும்படி கேட்டுக் கொண்டுள்ளார்

இப்பொழுது தமிழ் நாட்டில் சேட்டிலைட், டிஜிட்டல் என அனைத்து நிறுவனங்களும் உஷாராகிவிட்டது. அதனால் பெரிய தொகைக்கு எந்த படங்களையும் எடுத்து நஷ்டப்பட அவர்கள் விரும்பவில்லை. ஏற்கனவே கோல்ட்மைன் நிறுவனம்,  தானு படங்களை வாங்க வரிசை கட்டி நிற்கும். இப்பொழுது அவர்களும் விஜய் சேதுபதி படம் வேண்டாம் என்கிறார்கள். 

விஜய் சேதுபதி நடிப்பில் மகாராஜா படம் கூடிய விரைவில் வெளிவர இருக்கிறது. அந்த படம் நன்றாக வந்திருக்கிறது என்று படக் குழுவினர் தெரிவிக்கின்றனர். மகாராஜா படம் விஜய் சேதுபதிக்கு ஹிட் ஆகிவிட்டால் மிஷ்கினின் டிரெயின் படத்தை எப்படியும் வியாபாரம் செய்து விடலாம் என மனக்கோட்டை கட்டி வருகிறார் தானு.

- Advertisement -