விசாரணை பட லெவலில் சத்தமே இல்லாமல் உருவாகி வரும் படம்.. இப்பமே ஹிட் உறுதியாம்

தமிழ் சினிமாவில் வித்யாசமான படைப்புகள் மூலம் வெற்றி கண்டவர் இயக்குனர் வெற்றிமாறன். இவருடைய படங்கள் பெரும்பாலும் தனித்துவம் வாய்ந்ததாக இருக்கும். அந்த வகையில் பொல்லாதவன், ஆடுகளம், அசுரன், விசாரணை என பல வெற்றிப்படங்களை கொடுத்த வெற்றிமாறன் தற்போது சூரி வைத்து விடுதலை படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான திரைப்படம் விசாரணை. ஒரு உண்மை கதையை தழுவி எடுக்கப்பட்ட இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இப்படத்தில் அட்டக்கத்தி தினேஷ், கிஷோர், கயல் ஆனந்தி, முருகதாஸ் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

மேலும் தேசிய விருது வழங்கும் விழாவில் சிறந்த படம் என விசாரணை படம் தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தது. எப்போதுமே விசாரணை மாதிரி படங்களுக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருந்து வருகிறது. அதே வரிசையில் தற்போது ஒரு படம் உருவாகி வருகிறதாம்.

இந்தப் படத்திற்கு திரைக்கதை எழுதி இயக்குபவர் ராம்நாத். இவர் அம்பாசமுத்திரம் அம்பானி, திருநாள் போன்ற படங்களை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ஆதார் என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும் கருணாஸ், அருண்பாண்டியன், ரித்விகா, இனியா ஆகியோர் இப்படத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தில் முதலில் பாரதிராஜா நடிப்பதாக இருந்ததாம். ஆனால் சில காரணங்களால் அவர் நடிக்க முடியாமல் போக கருணாஸ் நடித்துள்ளார். மேலும் இப்படத்திற்கு தேவா இசையமைக்கிறார். வெண்ணிலா க்ரியேஷன் சார்பாக தயாரிப்பாளர் பி சசிகுமார் பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.

மேலும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. ஏனென்றால் இப்படத்தின் கதையை கேட்ட அனைவரும் படம் நிச்சயமாக மிகப்பெரிய ஹிட்டாகி விடும் என கூறுகிறார்களாம். இதனால் படக்குழு இப்போதே படம் வெற்றியானது போல் கொண்டாடி வருகிறார்கள்.

Next Story

- Advertisement -