வெண்பாவிடம் வசமாக சிக்கிய புதிய காதலன்.. தயவுசெய்து நிறுத்துங்கடா உங்க அக்கப்போரு தாங்கல

விஜய் டிவியின் பாரதிகண்ணம்மா சீரியலில் திருமணம் ஆனா என்ன, இரண்டு பிள்ளைகள் பிறந்தால் என்ன என்று பாரதியை ஒன்பது வருடங்களாக திருமணம் செய்துகொள்ள முயற்சிக்கும் வெண்பாவிற்கு கடைசியில் ஏமாற்றம் மட்டுமே கிடைத்தது. இதனால் வெண்பாவிற்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என அவளுடைய அம்மா அமெரிக்காவில் இருந்து கிளம்பி வந்திருக்கிறார்.

அவர் ரோஹித் என்பவரை வெண்பாவிற்கு மாப்பிள்ளையாக தேர்வு செய்து, அவனைத் தன் வீட்டிலேயே தங்க வைத்திருக்கிறார். வெண்பாவின் புதிய காதலனான ரோஹித், பாரதிக்கும் வெண்பாவிற்கும் இருக்கும் காதலை ஏற்கனவே தெரிந்து கொண்டதால் வெண்பா அவனை வெறுத்து பேசினாலும் , அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அவடைய மனதில் எப்படியாவது இடம் பிடிக்க வேண்டுமென பல வேலைகளை பார்த்து வருகிறான்.

வெண்பாவிற்கு வேண்டிய உணவை சமைத்து தருவது, அவள் கிடைக்கவேண்டும் என சாமியிடம் பிராத்தனை பண்ணுவது என சீரியலில் காமெடி பீஸ் ஆகவே ரோஹித் காட்டப்பட்டு கொண்டிருக்கிறான். தற்போது ரோஹித் வெண்பாவின் பணத்திற்காக மட்டுமே இப்படி எல்லாம் நாடகமாடுகிறார் என்பது அவனுடைய கூட்டணியின் மூலம் சாந்திக்கு தெரியவந்துள்ளது.

உடனே சாந்தி வெண்பாவிடம் செல்ல உஷாரான வெண்பா, ரோகித் வாங்கிக்கொடுத்த வைர நெக்லஸை ஆசாரியாரை வைத்து இது உண்மையான நகை தானா என சரி பார்க்கிறாள். திருட்டு முழி முழிக்கும் ரோஹித் வெண்பாவிடம் வசமாக சிக்கிக் கொண்டான். இருப்பினும் வெண்பாவின் அம்மா கொடுத்த காசை வைத்து ரோஹித் வைர நெக்லஸ் வாங்கி இருக்க வாய்ப்பு இருக்கிறது.

ரோஹித் பணக்காரனை போல் நாடகம் ஆடுவது வெண்பாவின் அம்மாவுடைய பிளான் ஆக கூட இருக்கலாம். ஏனென்றால் திருமணமான பாரதியை சுற்றிச்சுற்றி வரும் மகளை மாற்றுவதற்கு அவளுடைய அம்மா ரோஹித்தை பகடைக்காயாக பயன்படுத்தி இருக்கலாம்.

ஒரு காலத்தில் ஓஹோன்னு ஓடிக்கொண்டிருந்த பாரதிகண்ணம்மா சீரியலில் கடந்த சில நாட்களாகவே வெண்பாவை டம்மி பீஸாக காட்டுக்கொண்டிருப்பதால், ரசிகர்களுக்கு இந்த சீரியலை சுத்தமாக பிடிக்காமல் போய்விட்டது. தயவுசெய்து சீரியலில் நிறுத்துமிடங்கள் என்றும் ஆதங்கப்படுகின்றனர்.

Next Story

- Advertisement -