சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

டபுள் மடங்கு சம்பளத்திற்கு ஓகே சொன்ன ஆதி குணசேகரன்.. கொட்டிக் கொடுக்க தயாரான சன் டிவி

New Gunaskeran Salary For Ethirneechal Serial: இதுவரை சின்னத்திரையில் ஒளிபரப்பான எத்தனையோ நாடகங்கள் மக்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்பட்டு வந்திருக்கிறது. ஆனால் சீரியலில் நடித்த ஒரு கேரக்டர் மக்களிடம் அதிக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்றால், அது கண்டிப்பாக எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் கேரக்டரில் நடித்து வந்த நடிகர் மாரிமுத்துவாகத் தான் இருக்கும்.

அந்த வகையில் குணசேகரன் கேரக்டர் வில்லத்தனமாக இருந்தாலும் அதில் காமெடி கலந்த நக்கல், நையாண்டி பேச்சு, பேசி பார்ப்பவர்களை ரசிக்கும்படி வைத்தது மாரிமுத்து தான். அப்படிப்பட்ட இவருடைய இழப்பு தற்போது யாராலயும் மறக்க முடியாது. அதனாலேயே இந்த சீரியலில் மட்டும் இவருக்கு பதிலாக இவர் என்று காட்ட முடியாமல் கொஞ்ச நாளாகவே அவருடைய ஞாபகத்தை வைத்து மட்டும் நாடகத்தை கொண்டு வந்தார்கள்.

Also read: ரமணா பட பாணியில் இறந்த குணசேகரனுக்கு உயிர் கொடுத்து வரும் எதிர்நீச்சல்.. கதிர், ஞானத்தை விட நல்லவரா?

ஆனாலும் இதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளிவர வேண்டும் என்பதற்காக குணசேகரன் கேரக்டருக்கு அவரைப் போலவே ஒருவரை தேர்ந்தெடுத்தார்கள். அவர்தான் வெள்ளித்திரையில் வில்லத்தனத்தை காட்டி மிரட்டி கொண்டு வரும் வேல ராமமூர்த்தி. இவர் அந்த கதாபாத்திரத்தில் நடித்தால் கொஞ்சம் பொருத்தமாக இருக்கும் என்று இவரிடம் பலரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தார்கள். ஆனால் இவரோ நான் தற்போது படங்களில் கமிட் ஆகி இருக்கிறேன்.

அத்துடன் எனக்கு ஒரு மாதம் வரை வெளிநாடுகளில் சூட்டிங் இருப்பதால் என்னால் எதிர்நீச்சல் சீரியலில் முழு பங்களிப்பையும் கொடுக்க முடியுமா என்பது எனக்கு சந்தேகமாக இருக்கிறது என்று கூறியிருந்தார். அதே நேரத்தில் இவர் நடித்தால் மட்டுமே தொடர்ந்து எதிர்நீச்சல் சீரியலை சுவாரசியமாக கொண்டு போக முடியும் என்று ஒட்டுமொத்த எதிர்நீச்சல் டீமும் முடிவோடு இருந்தார்கள்.

Also read: வெறுப்பை கக்கும் எதிர்நீச்சல் சீரியல், குணசேகரனை மிஞ்சும் கதிர்.. போற போக்கு பார்த்தா டம்மி ஆயிடும் போல

அத்துடன் இவர் நடித்தால் டிஆர்பி ரேட்டிங்கை முதலிடத்தில் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று சன் டிவி நிறுவனம் இவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்கள். இதனை அடுத்து வேல ராமமூர்த்தி இடம் இருந்து எந்த ஒரு பதிலும் சரியாக வராததால், எங்கே அடித்தால் காரியம் நடக்கும் என்பதை சன் டிவி நிறுவனம் புரிந்து கொண்டு அதை கச்சிதமாக செய்து விட்டது. அதாவது இதுவரை குணசேகரன் கேரக்டருக்கு கொடுத்த சம்பளத்தை விட டபுள் மடங்கு சம்பளத்தை நாங்கள் கொடுக்க தயாராக இருக்கிறோம் என்று சொல்லி இருக்கிறார்கள்.

அதன்பிறகே வேலராமமூர்த்தி ஓகே சொல்லி அவருக்கு இருந்த எல்லா வேலைகளையும் மூட்டை கட்டி விட்டு எதிர்நீச்சல் சீரியலில் மாஸ் என்ட்ரி கொடுத்திருக்கிறார். அந்த வகையில் இவருடைய சம்பளம் ஒரு மாதத்திற்கு 16 முதல் 18 லட்ச ரூபாய் வரை வாங்குவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. இது இவருக்கு படங்களில் கிடைக்கும் சம்பளத்தை விட அதிகமாகவும், இதுவரை சீரியலில் யாரும் வாங்காத சம்பளம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Also read: இந்தாம்மா ஏய், மருமகள்களுக்கு ஆப்படிக்க வரும் புது குணசேகரன்.. பிபி-யை எகிற வைக்கும் எதிர்நீச்சல்

- Advertisement -

Trending News