அவ பின்னாடி நாய் மாதிரி சுத்திட்டு இருக்கான்.. பிரதீப்பை விட கேவலமா பண்றது உங்க கண்ணுக்கு தெரிலயா பிக்பாஸ்

BB7 Tamil Nixen: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இருந்து பிரதீப் வெளியேற்றப்பட்டது பார்வையாளர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதே நேரத்தில் அவருக்கு ரெட் கார்டு கொடுத்து வெளிய அனுப்ப சொன்ன முக்கிய போட்டியாளர்களான மாயா மற்றும் பூர்ணிமா மீது ஆடியன்ஸ்கள் உச்சகட்ட கோபத்தில் இருக்கிறார்கள். அவர்களை தாண்டி இப்போது நெட்டிசன்களிடம் சிக்கி இருப்பது நிக்சன் தான்.

நிக்சன் பிரதீப்பை பற்றி கமலஹாசனிடம் சொல்லும் பொழுது அவர் தரம் இல்லாமல் நடந்து கொள்கிறார் என்ற வார்த்தையை உபயோகித்து இருந்தார். தரத்தை பற்றி பேச உனக்கு என்ன தகுதி இருக்கிறது என்று நெட்டிசன்கள் வெளியே அவரை கிழித்து கொண்டு இருக்கிறார்கள். ஒரு பெண்ணை அவமானப்படுத்துவது நோக்கம் இல்லை என்றாலும் நிக்சனை பற்றி வெளியே தெரிய வேண்டும் என்பதால் சில வீடியோக்களையும் ஷேர் செய்து வருகிறார்கள்.

நிக்சன் எந்நேரமும் ஐஷு பின்னாடி சுற்றுவதை மட்டும் தான் அவர் வேலையாக வைத்துக் கொண்டிருக்கிறார். ஐஷுவை எப்போது பார்த்தாலும் தொட்டுக் கொண்டிருப்பது, நெருக்கமாக அமருவது, சாப்பாடு ஊட்டுவது, தூக்கி செல்கிறேன், தூங்க வைக்கிறேன் என்ற பெயரில் முகம் சுளிக்கும் அளவிற்கு நடந்து கொள்கிறார்.

Also Read:மாயாவின் முகத்திரையை கிழித்தெறிந்த அழுமூஞ்சி அர்ச்சனா.. சூனியக்காரியின் தவறை தட்டிக் கேட்காத கமல்

ஐஷுவை பொறுத்த வரைக்கும் நிக்சனை நான் காதலிக்கவில்லை, என் வீட்டில் என்னை சேர்த்துக் கொள்ள மாட்டார்கள் என்று புலம்பிக் கொண்டிருந்தார். இப்படி சொல்லும் ஒரு பெண்ணை மீண்டும் மீண்டும் தொட்டுப் பேசுவது பிக் பாஸ் கண்களுக்கு தெரியவில்லையா என கேள்வி எழுப்பி வருகிறார்கள் இணையதள வாசிகள்.

அது மட்டுமல்லாமல் பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுக்கும் விஷயத்தில் ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்களை கேட்கவே வேண்டாம் அவர்கள் எல்லாம் ஒரு ஆளே இல்லை என்று சொல்லி இருந்தார். அதற்கு தினேஷ், பிரதீப் உன்னை தகுதி இல்லை என்று சொன்னது உனக்கு கோபம் வந்தது, ஆனால் இப்போது நீ சொல்வது சரிதானா என்று முகத்தில் அடித்தால் போல் கேட்டுவிட்டார்.

ஆரம்பத்தில் நிக்சன் நல்ல போட்டியாளராக பார்வையாளர்களால் கணிக்கப்பட்டார். கடந்த சில வாரங்களாக அவர் ஐஷுவிடம் நடந்து கொள்ளும் முறை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது. மாயா மற்றும் பூர்ணிமா உடன் கூட்டு சேர்ந்தால் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே போக மாட்டோம் என்ற மமதை நிக்சனுக்கு வந்துவிட்டது.

Also Read:சினேகனுக்கு இருக்கிற அறிவில 10% கூட ஆண்டவருக்கு இல்லையா.? பிரதீப்பிற்காக கொந்தளித்த பிரபலம்