ஜெயிலர் வெற்றியால் அடுத்தடுத்து நெல்சன் கூட்டணியில் உருவாகும் 5 படங்கள்.. தலைசுற்ற வைக்கும் சன் பிக்சர்ஸ் பட்ஜெட்

Sunpictures-Nelson: நெல்சன் இயக்கத்தில் மாபெரும் படைப்பாய் பார்க்கப்படும் படம் தான் ஜெயிலர். நாளுக்கு நாள் இப்படத்தின் வசூல் அதிகரிக்கும் நிலையில் தற்போது மீண்டும் சன் பிக்சர்ஸ் உடன் இணைந்து ஐந்து படங்களை உருவாக்க திட்டம் தீட்டி வருகிறாராம் நெல்சன்.

நீண்ட நாளைக்கு பிறகு ரஜினியின் படம் பார்த்தது போல இருப்பதாக மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது ஜெயிலர். இப்படத்தினை சன் பிக்சர்ஸ் வழங்கி பல கோடி லாபத்தை பார்த்து வருகிறது. சன் பிக்சர்ஸ், நெல்சன் இயக்கத்தில் உருவான ஜெயிலர் குறித்து ஆரம்பத்தில் தயக்கம் காட்டி வந்தது.

Also Read: பீஸ்ட் தோல்விக்கு யார் காரணம் நெல்சனா இல்ல விஜய்யா.? சிதர் தேங்காய் போல உண்மையை உடைத்த கலாநிதி மாறன்

அவ்வப்போது ரிலீஸிற்கு பிறகு வசூல் வேட்டை கண்டு வரும் இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இணைய போவதாக கூறப்படுகிறது. ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பின் போது, நெல்சன் கலாநிதி மாறன் இடம் ஜெயிலர் கதையை தவிர்த்து ஐந்து கதை கூறினாராம்.

ஐந்து கதையில் மூன்று கதை லவ் ஸ்டோரி ஆகவும், மீதி இரண்டும் ஆக்சன் கதையாகவும் கூறினாராம். இதை அனைத்தையும் கேட்டுவிட்டு கலாநிதி மாறன் ஓகே சொல்லிவிட்டதாகவும் நெல்சன் கூறியுள்ளார். அதைத்தொடர்ந்து இவர்கள் இருவரின் கூட்டணியில் இப்படங்களை மேற்கொள்ளப் போவதாக பேச்சு அடிபட்டு வருகிறது.

Also Read: கமல் சொன்னதை கண்முடித்தனமாக நம்பிய ரஜினி.. எவ்வித களங்கமும் இல்லாமல் ஜெயித்த நட்பு

அந்த ஐந்து படத்தையும் கண்டிப்பாக கலாநிதி மாறன் தான் தயாரிப்பாளர் எனவும் நெல்சன் அடித்து கூறி வருகிறார். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல கோடி வசூலை அள்ளிக் கொட்டிய ஜெயிலர் படத்தை தொடர்ந்து 2 ஆக்சன் படங்களில் அஜித் மற்றும் தனுஷை வைத்து களமிறங்க உள்ளாராம் நெல்சன்.

அதுவும் அஜித்தை வைத்து மேற்கொள்ளும் படத்திற்கு 300 கோடி பட்ஜெட்டும், தனுஷை வைத்து 200 கோடி பட்ஜெட்டிலும் உருவாக்க திட்டம்தீட்டி உள்ளார்களாம். மீதம் இருக்கும் மூன்று லவ் ஸ்டோரி படங்களையும் சுமார் 100 கோடி பட்ஜெட்டில் தயாரிப்பை மேற்கொள்ளப் போகிறார்களாம். இதனை குறித்த அப்டேட் விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: ஜெயிலர் நரசிம்மனை தட்டி தூக்கிய விடாமுயற்சி படக்குழு.. ரஜினியை ஃபாலோ பண்ணும் அஜித்

- Advertisement -