சைலன்ட் ஆக சகுனி வேலை பார்க்கும் நயன், த்ரிஷாவை கழட்டிவிட்ட RJ பாலாஜி.. புக் ஆன தோழி நடிகை

Nayanthara: எனக்கு ஒரு கண்ணு போனா கூட பரவாயில்லை என் எதிரிக்கு ரெண்டு கண்ணும் போகணும்னு ஒரு பழமொழி சொல்லுவாங்க. அதை சரியாக பாலோ செய்கிறார் நடிகை நயன்தாரா. மற்றும் திரிஷா இருவருக்கும் இடையே சுமுகமான உறவு இல்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான்.

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் கனவு கன்னியாக இருந்த திரிஷாவின் மார்க்கெட் நயன்தாரா வந்த பிறகு பாதாளத்திற்கு சென்றது. நயன்தாரா கல்யாணம் பண்ணி செட்டில் ஆகும் கேப்பில் ஒட்டுமொத்த தென்னிந்திய மார்க்கெட்டையும் தன் கைவசம் கொண்டு வந்து விட்டார் திரிஷா.

இது நயன்தாராவுக்கு கொஞ்சம் கடுப்பு தான் என்றாலும் அதை வெளியில் தெரியாத அளவுக்கு காட்டிக் கொள்கிறார். இருந்தாலும் பின்னணியில் த்ரிஷாவுக்கு என்னவெல்லாம் இடைஞ்சல் கொடுக்க முடியுமோ அதை எல்லாம் பக்காவாக செய்து வருகிறார்.

அதாவது தன்னுடைய நெருங்கிய நட்பு வட்டாரத்தில் இருக்கும் இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் திரிஷாவுக்கு வாய்ப்பு கொடுக்காத அளவிற்கு பார்த்துக் கொள்கிறார். அட்லி, தெலுங்கு சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜுனை வைத்து ஒரு படம் இயக்குவதாக அப்டேட் வெளியானது.

சைலன்ட் ஆக சகுனி வேலை பார்க்கும் நயன்

இதில் த்ரிஷா தான் கதாநாயகி என்று ஒரு அளவுக்கு ஊர்ஜிதமான நிலையில், பின்னர் அந்த கதாநாயகி தேர்வு அப்படியே கிடப்பில் போடப்பட்டது. ஒரு விஷயம் தொடர்ந்து ஒரே மாதிரி நடந்தால் தான் மக்களுக்கு சந்தேகம் வரும்.

அப்படித்தான் மாசாணி அம்மன் பட விஷயத்தில் மாட்டிக் கொண்டார் நயன்தாரா. நயன் மற்றும் ஆர்ஜே பாலாஜி கூட்டணியில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் மூக்குத்தி அம்மன். ஆர் ஜே பாலாஜிக்கு நயன்தாரா கொடுத்த வாய்ப்பு பெரிய அளவில் அவருக்கு உதவியாக இருந்தது.

மீண்டும் அதே பாணியில் ஒரு படத்தை எடுக்க பாலாஜி முடிவு எடுத்திருக்கிறார். இந்த படத்திற்கு மாசாணி அம்மன் என்று டைட்டில் கொடுத்ததோடு அம்மன் வேடத்தில் நடிக்க போவது த்ரிஷா தான் என்று உறுதியாக சொல்லப்பட்டது. இடையில் புகுந்து வழக்கமாக சோழி உருட்டி இருக்கிறார் நயன்தாரா.

த்ரிஷா வாய்ப்பை பிடுங்கி தன்னுடைய நெருங்கிய தோழி ஒருவருக்கு கொடுத்திருக்கிறார். யார் அந்த தோழி நடிகை என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருக்கலாம். காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் மூலம் நயன்தாராவோடு ஜவ்வு போல் ஒட்டிக்கொண்ட சமந்தா தான் அந்த நடிகை. மாசாணி அம்மன் படத்தில் சமந்தாவின் நடிக்க வைக்க தற்போது பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திற்கு பிறகு சமந்தா மீண்டும் இந்த படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.

குடுமிபிடி சண்டை போடும் நம்பர் நடிகைகள்

Next Story

- Advertisement -