ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்.. அம்மாடியோ! கமலுக்கு ஜோடியாக நயன்தாரா கேட்ட 3 மடங்கு சம்பளம்

Kamal-Nayanthara: திருமணம் ஆனாலும் நயன்தாராவுக்கு மவுசு குறையாமல் தான் இருக்கிறது. எப்போதுமே நான்தான் நம்பர் ஒன் என கெத்துக்காட்டி வரும் இவர் சமீபத்தில் ஷாருக்கானுடன் இணைந்து நடித்த ஜவான் பாலிவுட்டில் இவருக்கான சிறந்த அடையாளத்தை கொடுத்தது. அதைத்தொடர்ந்து அம்மணி இப்போது தன்னுடைய சம்பளத்தையும் மூன்று மடங்காக உயர்த்தி இருக்கிறார்.

இதனால் சக நடிகைகள் வயிற்றில் பொறாமை தீ பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. ஆனால் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாத நயன் இப்போது வருகிற வாய்ப்பை எல்லாம் ஓகே சொல்லி அட்வான்ஸை வாங்கி போட்டு வருகிறாராம். அந்த வகையில் தற்போது இவருடைய கைவசம் டெஸ்ட், அன்னபூரணி, மண்ணாங்கட்டி, கமல், மணிரத்னம் கூட்டணியின் KH 234 என பல படங்கள் இருக்கிறது.

அதில் மணிரத்தினத்தின் படம் அவருக்கு மிகவும் ஸ்பெஷலான ஒன்றாக இருக்கிறது. ஏனென்றால் இந்த இரண்டு ஜாம்பவான்களுடன் அவர் முதன் முறையாக இணைகிறார். அதிலும் திரிஷா, வித்யா பாலன், சமந்தா உள்ளிட்ட பல நடிகைகள் போட்டிக்கு இருந்த நிலையில் அதையெல்லாம் ஓரங்கட்டி லேடி சூப்பர் ஸ்டார் இந்த வாய்ப்பை தட்டி தூக்கி இருக்கிறார்.

மேலும் இப்படத்திற்காக அவருக்கு 12 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டிருக்கிறது. இதுதான் இப்போது கோலிவுட் வட்டாரத்தின் சூடான செய்தியாக இருக்கிறது. ஏனென்றால் கடந்த சில வருடங்களாகவே இவர் தன்னுடைய சம்பளத்தை படிப்படியாக உயர்த்தி வந்தார். அதில் கோலமாவு கோகிலாவுக்காக இவர் மூன்றில் இருந்து நான்கு கோடி வரை சம்பளமாக பெற்ற நிலையில் தர்பார் படத்தில் 5.5 கோடி வாங்கி இருந்தார்.

அதைத்தொடர்ந்து கனெக்ட் படத்திற்காக இவருக்கு 8 கோடி சம்பளம் தரப்பட்டிருக்கிறது. இப்படியாக அதிக சம்பளம் வாங்கும் பட்டியலில் இடம் பெற்று இருந்த நயன்தாரா ஜவான் படத்தில் தன்னுடைய சம்பளத்தை 10 கோடியாக உயர்த்தி இருந்தார். அது தற்போது மேலும் இரண்டு கோடியாக அதிகரித்து இருக்கிறது.

இதன் மூலம் கமல், மணிரத்தினத்துடன் இணைந்த மாதிரியும் ஆச்சு. அதே போல் சம்பளத்தையும் உயர்த்தியாச்சு என ஒரே கல்லில் அவர் இரண்டு மாங்காயை அடித்திருக்கிறார். இப்படி செமையாக கல்லாக் கட்டி வரும் நயன் தன்னுடைய பிசினஸிலும் பல மடங்கு லாபம் பார்த்து வருவது குறிப்பிடத்தக்கது.