Actress Nayanthara: ஏதாவது ஒரு சர்ச்சைக்குள் தலையை விடவில்லை என்றால் நயன்தாராவிற்கு பொழுதே போகாது போலும். அப்படித்தான் தற்போது அவர் ஷாருக்கானுக்கு நோ சொல்லிவிட்டு அம்பானிக்கு ஓகே சொல்லிய விஷயம் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
அதாவது டாப் பணக்காரரான அம்பானி சமீபத்தில் விநாயகர் சதுர்த்தியை தன் வீட்டில் கோலாகலமாக கொண்டாடினார். அதற்கு சினிமா பிரபலங்கள் முதல் கிரிக்கெட் பிரபலங்கள் வரை அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
Also read: விக்னேஷ் சிவனின் வரிகளில் ஹிட்டான 6 பாடல்கள்.. நயன்தாராவுக்காகவே உருகி எழுதிய சாங்
அதன்படி ஷாருக்கான், ஜான்வி கபூர், போனி கபூர், ஜெனிலியா, திஷா பதானி உள்ளிட்ட பிரபலங்களோடு ராஷ்மிகா, விக்கி-நயன்தாரா, பிரியா-அட்லி என தென்னிந்திய நட்சத்திரங்களும் கலந்து கொண்டனர். அதுதான் இப்போது நயன்தாரா மீதான விமர்சனத்திற்கு காரணமாக அமைந்துள்ளது.
ஏனென்றால் மும்பையில் தனக்கான மாஸ் இருந்த போதும் கூட ஜவான் இசை வெளியீட்டு விழாவை ஷாருக்கான் சென்னையில் நடத்தி இருந்தார். ஆனால் அதில் நயன்தாரா கலந்து கொள்ளவில்லை. அதேபோன்று ஜவான் சக்ஸஸ் மீட் மும்பையில் நடந்த போது கூட நயன் அதில் பங்கேற்கவில்லை.
Also read: வெளியவே விடாமல் அட்லியை அமுக்கும் ஷாருக்கான்.. ராட்சச திமிங்கலத்துக்கு வீசும் வலை
பொதுவாகவே பட ப்ரமோஷன்களில் அவர் கலந்து கொள்ள மாட்டார் என்பது அனைவருக்கும் தெரியும். அது இப்போதும் கூட சர்ச்சையாக பேசப்பட்டு வருகிறது. அப்படி இருக்கும் நயன்தாரா அம்பானி தன் வீட்டு விசேஷத்திற்கு கூப்பிட்டதும் துள்ளி குதித்துக் கொண்டு மும்பைக்கு பறந்து விட்டார்.
விக்கி-நயன்தாரா
இது ஷாருக்கானை ரொம்பவும் அப்செட் ஆக்கிவிட்டதாம். தன் பட ப்ரமோஷனுக்கு வராதவர் இதற்கு மட்டும் வந்திருக்கிறாரே என அவர் ஷாக் ஆனது வெளிப்படையாகவே தெரிந்ததாம். ஆனால் இதெல்லாம் நயன்தாராவின் பிசினஸ் பிளான் தான். ஆதாயம் இல்லாமல் அவர் எதையும் செய்ய மாட்டார் என்று திரையுலகில் இப்போது பேசி வருகின்றனர்.