இவ்வளவு ஆடம்பரம் தேவையா.? சர்ச்சையில் சிக்கிய நவரசா படத்தின் விளம்பரம்

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் மணிரத்னம் தயாரிப்பில் 9 இயக்குனர்கள் இயக்கத்தில் நவரசங்களையும் அதாவது 9 உணர்வுகளையும் மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள ஆந்தாலஜி படம் தான் நவரசா. சூர்யா, விஜய் சேதுபதி, சித்தார்த் , அதர்வா , ரேவதி உள்ளிட்ட பல முக்கிய மற்றும் முன்னணி நடிகர்களின் நடிப்பில் இன்று வெளியாகியுள்ளது.

மனிதனின் ஒன்பது குணங்களை வெளிப்படுத்தும் விதமாக, காதல், கோவம், நகைச்சுவை உள்ளிட்ட 9 குறும்படங்களின் தொகுப்பாக வெளியாகியுள்ளது நவரசா. இந்த ஆந்தாலஜி தொடரை கெளதம் மேனன், அரவிந்த்சாமி, பிரியதர்ஷன், கார்த்திக் நரேன், வசந்த் சாய், கார்த்திக் சுப்புராஜ், பிஜோய் நம்பியார், சர்ஜூன், ரதீந்திரன் பிரசாத் என 9 இயக்குநர்கள் இயக்கி உள்ளனர்.

படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், படத்தின் புரமோஷன் வேலைகளை தடபுடலாக செய்து வருகின்றனர். குறிப்பாக உலகின் மிக உயரமான கட்டிடம் என அழைக்கப்படும் புர்ஜ் கலிஃபாவிலும் நவரசா படத்தின் டைட்டில் விளம்பரங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

suriya-vjs-cinemapettai
suriya-vjs-cinemapettai

மற்றொரு பக்கம் இந்த விளம்பரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவ்வளவு செலவு செய்து புர்ஜ் கலிபா கட்டிடத்தில் விளம்பரம் செய்வதற்கு பதிலாக அந்த பணத்தை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கலாமே என பலர் கேள்விகளை முன்வைத்து வருகின்றனர்.

navarasa-netflix
navarasa-netflix

வீடியோவை பார்க்க லிங்கை கிளிக் செய்யவும்

முன்னதாக கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட திரைத்துறை கலைஞர்களுக்கு நிதி திரட்டும் நோக்கில் தான் இந்த ஆந்தாலஜி படம் எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்திருந்தனர். அதுமட்டுமின்றி அவர்களுக்கு உதவும் நோக்கில் இத்தொடரின் நடித்த எந்தவொரு கலைஞர்களும் சம்பளம் பெறவில்லை எனவும் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இவ்வளவு செலவு செய்து புரமோஷன் செய்வதற்கான காரணம் என்ன ஏன் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்