தாலியை கழட்டி எறிய துணிந்த நந்தினி, கன்னத்தை பழுக்க வைத்த மாமியார்.. வளர்ப்பு மகளை அசிங்கப்படுத்தும் கதிர்

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியல் அழகான கதையை வைத்து ஆரம்பித்தது. ஆனால் தற்போது எரிச்சலை உண்டாக்கும் அளவிற்கு தடம் மாறிப் போகிறது . முக்கியமாக கதிரின் ஆட்டம்  ரொம்பவே ஓவராக போய்விட்டது. அதாவது குணசேகரன் வீட்டை விட்டுப் போனதால் மொத்த கோபத்தையும் அந்த வீட்டில் இருக்கும் பெண்களிடம் காட்டும் விதமாக அராஜகமாக நடந்து கொள்கிறார் கதிர்.

நந்தினி முதியோர் இல்லத்திற்கு சமைத்துக் கொடுக்கும் சமையல் ஆர்டரை எடுத்து நடத்தி வந்தார். ஆனால் தற்போது வீட்டில் நடக்கும் பிரச்சினைகளால் அவரால் தொடர்ந்து சாப்பாடை சரியான நேரத்தில் கொடுக்க முடியாமல் போய்விட்டது. இதனால் குணசேகரன் வீட்டிற்கு முதியோர் இல்லத்தில் இருந்து ஒருவர் வந்து கைநீட்டி அட்வான்ஸ் காசை வாங்கினீங்களா, அதற்கு ஏற்ற மாதிரி சமைத்து கொடுக்க வேண்டும் என கோபமாக பேசுகிறார்.

Also read: நந்தினியை மோப்பம் பிடித்து வந்த குணசேகரனின் விசுவாசி.. சக்தி ஜனனிக்கு ஒர்க் அவுட் ஆகும் கெமிஸ்ட்ரி

உடனே நந்தினி உங்க அட்வான்ஸ் காசை நான் இப்பொழுதே திருப்பித் தருகிறேன் என்று, போட்டிருந்த தாலி செயினை கழட்ட போகிறார். இதை பார்த்த குணசேகரின் அம்மா நிறுத்துடி குத்துக்கல்லாட்ட உன் புருஷன் கண் எதிரே நின்னுகிட்டு இருக்கான். அவன் முன்னாடியே உன் தாலியை கழட்ட போற என்று ஆவேசமாக பொங்கி எழுகிறார்.

அதற்கு நந்தினி அவங்க ஒழுங்கா மரியாதை கொடுத்தால் நாங்க மரியாதை கொடுப்போம். மேலும் இந்த தாலி என்னைய பொறுத்த வரை வெறும் செயின் தான் என்று மாமியாரிடம் மல்லு கட்டுகிறார். இதை கேட்ட குணசேகரனின் அம்மா அதற்காக இந்த தாலியே அறுத்து போட்டு விடுவியா என்று கேட்கிறார்.

Also read: குணசேகரனை நம்பி மோசம் போன கதிர்.. புருசனை நினைத்து கண்ணீர் வடிக்கும் நந்தினி

இதற்கு எந்தவித யோசனையும் இல்லாமல் நந்தினி ஆமா அறுத்து போட்டு விடுவேன் என்று கோபமாக சொல்கிறார். இதை கேட்டதும் உணர்ச்சிவசப்பட்டு கோபத்துடன் நந்தினி கண்ணம் பழுக்கிற மாதிரி ஓங்கி ஒரு அறை விடுகிறார். இதைப் பார்த்து அனைவரும் வாயடைத்து போயி நிற்கிறார்கள். இதற்கு அடுத்தபடியாக ஜீவானந்தத்தின் மகள் வெண்பாவை பார்த்து இது யார் என்று ஈஸ்வரிடம் கதிர் கேட்கிறார்.

அதற்கு ஈஸ்வரி உனக்கும் இதுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று சொல்கிறார். அடுத்து வழக்கம் போல் கதிர் அவருடைய அடாவடித்தனமான பேச்சை ஆரம்பித்து சண்டை இழுக்கிறார். ஆக மொத்தத்தில் இதற்கான கதைகளும் தற்போது மாறி வேறொரு கோணத்தில் நகர்ந்து வருகிறது. அந்த வகையில் இந்த நாடகத்தை பார்ப்பது கொஞ்சம் எரிச்சல் ஊட்டுகிறது என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Also read: நந்தினியின் மொத்த நம்பிக்கையும் சுக்குநூறாக ஓடச்சிட்டாங்க.! குணசேகரனை விட மோசமான விஷப்பாம்பு இவன்தான்