ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 10, 2024

சைக்கோவை கையும் களவுமாய் பிடிக்க குடும்பத்தோடு மூர்த்தி போடும் பல திட்டம்.. எகிறப்போகும் டிஆர்பி

Pandian Stores: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தற்போது முடியும் தருவாயில் கிளைமாக்ஸ் நெருங்கிவிட்டது. அந்த வகையில் கதிர் மற்றும் ஜீவா, மீனாவின் அப்பாவை கொலை பண்ண வில்லை மொத்த திருட்டையும் செய்தது பிரசாந்த் தான் என்ற உண்மை மீனாவுக்கு தெரிந்து விட்டது.

அதனால் அவரை கையும் களவுமாக பிடிக்க வேண்டும் என்பதற்காக அவருடைய மூளையை கசக்கிய பின்பு மூர்த்தி மாமாவிடம் சொல்லலாம் என்று முடிவெடுத்து இருக்கிறார். அதற்காக மீனா, மூர்த்தி வீட்டுக்கு போய் பிரசாந்த் பண்ணின எல்லா விஷயத்தையும் ஒவ்வொன்றாக சொல்கிறார்.

Also read: பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டை விட்டு வெளியேறிய மருமகள்.. மீண்டும் சுக்குநூறாக உடையும் குடும்பம்

இதைக் கேட்டு அதிர்ச்சியான ஒட்டுமொத்த குடும்பமும், இந்த பிரசாந்தை அவருடைய வாயாலேயே எல்லா தப்பையும் ஒத்துக்கிற மாதிரி பிளான் பண்ணி காய் நகர்த்த வேண்டும் என்று மூர்த்தி ஐடியா கொடுக்கிறார். அதற்கு ஏற்ற மாதிரி பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் மருத்துவமனையில் ஆங்காங்கே ஒளிந்து கொண்டு கோழியை அமுக்குற மாதிரி அமுக்கெல்லாம் என்று மறைந்திருக்கிறார்கள்.

அப்பொழுது பிரசாந்த், மீனாவிடம் இரவு முழுவதும் நான் மாமாவை பார்த்துக் கொள்கிறேன் நீங்கள் அனைவரும் வீட்டுக்குப் போங்க என்று அனுப்பி வைக்கிறார். மீனாவும் இவர் சொல்வதை அப்படியே கேட்டபடி டிராமா பண்ணுகிறார். அதே மாதிரி ஐஸ்வர்யாவும் அவருடைய போனை ஜனார்த்தன் பக்கத்தில் வைத்து ரிக்கார்டு பட்டனை ஆன் பண்ணி வைத்து விடுகிறார்.

Also read: பாண்டியன் ஸ்டோர்ஸ் டிஆர்பிஐ எடுத்து பிக்பாஸில் சொருகிய விஜய் டிவி.. அண்ணன் தம்பி பாசத்துக்கு வைத்து ஆப்பு

அப்பொழுது பிரஷாந்த் யாருக்கும் தெரியாமல் ஜனார்த்தன் ரூமுக்கு வருகிறார். வந்ததும் அவர் வாயாலேயே செஞ்ச எல்லா தில்லு முல்லு வேலைகளையும் சொல்லிக் கொண்டு மறுபடியும் ஜனார்த்தனை கொல்வதற்கு முயற்சிக்கிறார். அந்த நேரத்தில் சரியாக மூர்த்தி உள்ளே நுழைந்து பிரசாந்தின் கழுத்தைப் பிடித்து எல்லாத்துக்கும் நீதானா காரணம் என்று ரூமை விட்டு வெளியே கூட்டி வந்து விடுகிறார்.

அப்பொழுது ஒளிந்திருந்தவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து பிரசாந்தை போலீசாரிடம் ஒப்படைக்கலாம் என்று சொல்கிறார்கள். உடனே மீனா, பிரசாந்தை பார்த்து நல்ல நாலு கேள்வி நாக்க புடுங்குற மாதிரி கேட்டு விடுகிறார். இதற்கு பின்னர் ஜீவா மற்றும் கதிர் வீட்டுக்கு வந்து குடும்பமாக ஒன்று சேரப் போகிறார்கள். ஆக மொத்தத்தில் அனைவரும் ஒன்று சேர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகத்திற்கு எண்டு கார்டு போடப் போகிறார்கள்.

Also read: ஜெயிலுக்குப் போகும் ஜீவா கதிர்.. பழனிக்கே பால் காவடி எடுத்தாலும் பாண்டியன் ஸ்டோர்ஸ்-க்கு எண்டு கார்டே இல்ல

- Advertisement -spot_img

Trending News