விட்ட குறை தொட்ட குறையில் ஒட்டிக்கொள்ள நினைக்கும் மூர்த்தி.. வீட்டிற்கு கூட்டி வந்து அக்கப்போர் பண்ணும் மைனர்

Pandian Stores Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிவதற்குள் இதனுடைய தொடர்ச்சியாக இரண்டாம் பாகத்தின் ப்ரோமோ வெளியிடப்பட்டது. அந்த வகையில் சீக்கிரத்தில் இந்த நாடகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து விடுவார்கள் என்று பார்த்தால் ஒவ்வொரு வாரமும் எதையாவது கதையைக் கொண்டு வந்து உருட்டி விடுகிறார்கள்.

அதில் அனைய போற வழக்கு பிரகாசமாக எரியும் என்று சொல்வார்களே அதுபோல முடியும் தருவாயில் இருப்பதால் இதில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்த அனைவரும் தற்போது திருந்தி வருவது போல் கதை நகர்ந்து வருகிறது. இத்தனை வருடங்களாக மீனாவின் அப்பா பணம் இருக்கிற திமிரில் மற்றவர்களை ஏளனமாக பார்த்து பேசி வந்தார். தற்போது இளைய மகளின் வாழ்க்கை கெட்டுப் போனதும் மொத்தமாகவே வருந்தி ரொம்ப நல்லவராக மாறிவிட்டார்.

அடுத்தபடியாக பணம் தான் எனக்கு முக்கியம் என்று மூர்த்தியை உதாசினம் படுத்தி சொகுசு வாழ்க்கையே தேடி போனார் மல்லி. அதன்படி பிரசாந்த் தன் மகன் என்று திரும்பி வந்து பகட்டு வாழ்க்கையில் மற்றவர்களை மட்டம் தட்டி பேசி வந்தார். அப்படிப்பட்ட இவருடைய தற்போது நிலைமை ஆசை ஆசையாக வளர்த்த பிரசாந்த் இவ்வளவு கொடூரமான கேரக்டரில் இருக்கிறானே என்று தெரிந்ததும் கூனி குறுகி தலை குனிந்து போய் நிற்கிறார்.

அந்த வகையில் இவ்வளவு நாளாக ஆட்டம் போட்டதற்கு மொத்தமாக அடங்கி போய் நிற்கிறார். இதற்கிடையில் பிரசாந்த், மீனாவின் அப்பாவை கொலை முயற்சி பண்ணின காரணத்திற்காக போலீசார் அவரை வலை வீசு தேடிக் கொண்டு மீனாவின் வீட்டிற்கு வருகிறார்கள். அப்பொழுது மல்லி பிரசாந்த் இங்கே இல்லை அவர் வரவும் இல்லை என்று கூறுகிறார்.

அதற்கு போலீசார் இன்னும் இரண்டு நாட்களில் அவர் வரவில்லை என்றால் அவருக்கு பதில் உங்களை நாங்கள் கைது பண்ண வேண்டியதாக இருக்கும் என்று மிரட்டிட்டு போகிறார்கள். இதே கேள்விப்பட்ட மூர்த்தி, என்ன இருந்தாலும் தன் காதலிச்ச பொண்ணு ஆச்சே என்ற ஒரு நினைப்பில் மல்லி வீட்டிற்கு போய் தனியாக நீ இங்கே இருக்க வேண்டாம் என்னுடைய என் வீட்டிற்கு வந்து இரு என்று கூப்பிடுகிறார்.

அதற்கு மல்லி மறுப்பு தெரிவித்தாலும் எப்படியோ பேசி வீட்டிற்கு கூட்டிட்டு போய் விடுகிறார். அதன் பின் ஒரே வீட்டில் கட்டிட்டு வந்த தனம், காதலிச்ச மல்லி. இதுதான் சொல்லுவாங்க விட்ட குறை தொட்ட குறை என்று. இனிமேல் ஒவ்வொரு நாளும் பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில் அக்கப்போர் தான். பிள்ளை இல்லாத வீட்டில் கிழவன் துள்ளி விளையாடுவது போல் இனி மூர்த்தி காட்டில் அடை மழை.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்