வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

இயக்குனராக ஜெயிக்க முடியாமல் போன மாரிமுத்து.. எடுத்த மூன்று படங்களில் தோல்வியை கண்ட 2 படம்

Marimuthu: சமீப காலமாக சின்னத்திரையை ஒரு மிரட்டு மிரட்டி, பதற வைத்தவர் தான் குணசேகரன் என்கிற மாரிமுத்து. இவர் எதிர்நீச்சல் சீரியல் மூலம் தனது துணிச்சலான வசனங்களால் ஆடியன்ஸை திரும்பிப் பார்க்க வைத்தவர். இதற்கு முன்பு இவர் எக்கச்சக்க படங்களில் நடித்தது அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆனால் இவர் திரைப்படங்களை இயக்கி உள்ளார் என்பது பலராலும் அறியப்படாத ஒன்று.

இவர் இயக்கத்தில் வெளியான திரைப்படங்கள் குறித்து பெரிதாக யாருக்கும் தெரியாது. இவர் இயக்குனராக அறிமுகம் ஆவதற்கு முன்பே படங்களில் நடிக்க துவங்கி விட்டார். வாலி திரைப்படத்தில் இவர் உதவி இயக்குனராக பணியாற்றினார். அதனைத் தொடர்ந்து இவர் இயக்குனராக களம் இறங்கினர். அப்படி இவர் இயக்கிய மூன்று திரைப்படங்கள் பற்றி பார்ப்போம்.

Also Read:சிம்புவால் நொந்து நூடுல்ஸ் ஆன 5 பிரபலங்கள்.. ஒரே படத்தால் மொத்தமும் போண்டியான தயாரிப்பாளர்

ஆசை: மணிரத்தினம் தயாரிப்பில் இயக்குனர் வசந்த் இயக்கத்தில் வெளியான ஆசை திரைப்படத்தில் இவர் துணை இயக்குனராக இருந்தார். இதில் அஜித் குமார், சுவலக்ஷ்மி, பிரகாஷ்ராஜ், வடிவேலு போன்ற முன்னணி கதாநாயகர்கள் அனைவரும் நடித்துள்ளனர். திரைப்படத்தினை ஹிந்தியில் பியார் ஜின்டாகி ஹை என ரீமேக் செய்துள்ளனர்.

கண்ணும் கண்ணும்: 2008இல் வெளியான கண்ணும் கண்ணும் திரைப்படம் இவர் இயக்கத்தில் உருவானது தான். இதில் பிரசன்னா, உதயதரா, வடிவேலு, சந்தானம், விஜயகுமார் போன்றோர் நடித்துள்ளனர். திரைப்படம் ஒரு காதல் கதை சார்ந்தது. எதிர்பாராதவிதமாக காதலர்கள் அண்ணன் தங்கை ஸ்தானத்தில் தள்ளப்பட்டனர்.ரசிகர்களால் இன்று அளவிலும் மறக்க முடியாத காட்சிகளை கொண்டிருக்கும் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்துக்கு ஓரளவுக்கு மக்களிடத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

Also Read:5 வருட லட்சியத்துடன் பயணித்த மாரிமுத்து.. கடைசியாக தனது அக்காவிடம் சொன்ன மறக்க முடியாத சபதம்

புலிவால்: 2014 இல் வெளியான புலிவால் திரைப்படம் இவர் இயக்கத்தில் உருவான கடைசி திரைப்படமும் ஆகும். இதில் பிரசன்னா, விமல், ஓவியா, அனன்யா போன்றோர் நடித்துள்ளனர். இது மலையாளத் திரைப்படமான சாப்ப குரிஷு ரீமேக் ஆகும். இத்திரைப்படத்தில் சமூகத்தில் இருக்கும் தகாத உறவுகளால்  உண்டாகும் சிக்கல்களையும் வெளிச்சம் போடு கட்டியிருப்பார்கள்.

இந்தத் திரைப்படங்களுக்கு பிறகு இவர் பெரிதாக திரைப்படம் இயக்குவதில் கவனம் செலுத்தவில்லை. மாறாக சின்னத்திரையில் சீரியல் நடிப்பதில் கவனம் செலுத்தினார். அதுவும் அவருக்கு பெரிய அளவில் கை கொடுத்தது. தற்போது இவரை அறியாமல் யாருமே இருக்க மாட்டார்கள். இவரது எதிர்நீச்சல் சீரியலின் வசனங்கள் அனைத்தும் சமூக வலைத்தளங்களில் வெறித்தனமாக பரவி, இவரை ட்ரெண்டிங் நடிகராக மாத்தியது.

Also Read:பதட்டத்திலும் இந்த 5 காமெடியில் வயிறு குலுங்க சிரிக்க வைத்த குணசேகரன்.. விட்டா ட்ரோனை வேட்டிக்குள்ள விட்டுருவாங்க

- Advertisement -

Trending News