ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 3, 2024

அப்பத்தாவிற்கு அடைக்கலம் கொடுத்திருக்கும் ஜீவானந்தம்.. குணசேகரனுக்கு தண்ணி காட்டப் போகும் மருமகள்கள்

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியல் இப்போது பழைய மாதிரி விருவிருப்பான ட்விஸ்டுடன் கதை நகர்கிறது. அதாவது குணசேகரன், அப்பத்தாவிடம் இருந்து எப்படியாவது 40% சொத்தை ஆட்டைய போட்டுவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலைந்தார். ஆனால் அப்பத்தா, குணசேகரன் கண்ணில் விரலைவிட்டு ஆட்ட வேண்டும் என்பதற்காக அந்த சொத்தை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டார்.

அந்த வகையில் பெண்கள் முன்னேற்றத்திற்காக ஒரு இயக்கத்தை ஆரம்பித்து அதை பொறுப்பாக பார்த்துக் கொள்ளும் விதமாக ஜீவானந்தத்திடம் ஒப்படைத்துவிட்டார். அடுத்த படியாக மீதமுள்ள சொத்தை கொள்ளுப் பேரன், பேத்திகளுக்கு எழுதி வைத்திருக்கிறார். தற்போது இவர்கள் மைனராக இருப்பதால் அதை பாதுகாக்கும் பொறுப்பை மட்டும் மருமகளிடம் ஒப்படைத்திருக்கிறார்.

அதுவும் என்ன காரணத்திற்காக என்றால்? இந்த சொத்து கிடைத்து விட்டால் மருமகள்கள் அவர்கள் அப்படியே முடங்கி விடுவார்கள். சொந்தக் காலில் துணிச்சலுடன் போராட முன்னுக்கு வரமாட்டார்கள் என்பதால் அப்பத்தா தந்திரமாக இந்த பிளானை போட்டிருக்கிறார். இதெல்லாம் நல்லபடியாக முடிந்த நிலையில் குணசேகரனுக்கு மட்டும் ரொம்பவே ஏமாற்றமாக முடிந்துவிட்டது.

Also read: டிஆர்பி-யில் தெறிக்கவிடும் முதல் 6 நியூஸ் சேனல்ஸ்..  எல்லா பக்கமும் தண்ணி காட்டும் ஒரே சேனல் 

அதனால் குணசேகரனின் மொத்த கோபமும் அப்பத்தா மீது திருப்பியது. அவரை பழிவாங்குவதற்காக தூக்க மாத்திரையை பாலில் கலந்து கொடுத்துவிட்டார். அதன் பின் மயக்கமான அப்பத்தாவை குணசேகரன் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போனார். ஆனால் போகும் வழியில் அப்பத்தா இறந்து போன மாதிரி ஒரு அசம்பாவிதம் நடந்துவிட்டது. இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத மருமகள்கள் தற்போது நிலைகுலைந்து போய் நிற்கிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் அப்பத்தாவின் இறப்பிற்கு ஜீவானந்தம் தான் காரணம் என்று கட்டுக்கதைகளை கட்டி எல்லாரையும் நம்ப வைத்து போலீசிடம் சிக்க வைத்து விட்டார். இதை தெரிந்து கொண்ட ஈஸ்வரி இப்படி ஒரு கேடுகெட்ட பிள்ளைகளை பெற்று இருக்கீங்க என்று குணசேகரனின் அம்மாவிடம் கேட்கிறார். அதற்கு விசாலாட்சி ஈஸ்வரியை குறை சொல்கிறார். ஆகமொத்தத்தில் மருமகளுக்கு சப்போர்ட்டாக நின்ன காரணத்தினால் குணசேகரன், அப்பத்தாவை வஞ்சம் தீர்த்துவிட்டார்.

இதற்கிடையில் தான் எதிர்பாராத ட்விஸ்ட் நடந்திருக்கிறது. அதாவது குணசேகரன் அப்பத்தாவை காலி பண்ண பிளான் பண்ணியது எல்லாமே உண்மைதான். யாருக்கும் தெரியாமல் அப்பத்தாவை ஜீவானந்தம் அவருடைய தோழரை வைத்து காப்பாற்றிவிட்டார். தற்போது அப்பத்தா ஜீவானந்தம் பாதுகாப்பில் பத்திரமாக இருக்கிறார். இந்த விஷயத்தை மருமகளிடம் இருந்து மறைக்கிறார். அதற்கு காரணம் இந்த ஒரு கோபத்தினால் அவர்களுடைய போராட்டத்தை ஆரம்பித்து துணிச்சலுடன் வெற்றி பெறுவார்கள் என்பதற்காக. அந்த வகையில் இனி குணசேகரன் கண்ணில் நான்கு மருமகள்கள் விரலை விட்டு ஆட்டப் போகிறார்கள்.

Also read: போலீஸிடம் சிக்கும் ஜீவானந்தம், ஈஸ்வரி.. எதிர்பாராத திருப்பங்களுடன் எதிர்நீச்சல்

- Advertisement -spot_img

Trending News