சிங்கப்பெண்ணில் ஆனந்தியை மருமகளாக ஏற்றுக் கொள்ளும் அன்புவின் அம்மா.. சதி வேலையை ஆரம்பித்த மித்ரா

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலில் இந்த வாரம் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதற்கு காரணம் அப்பாவின் திதிக்கு வீட்டுக்கு வரும் ஆனந்தியிடம் நான்தான் அழகன் என அன்பு சொல்லிவிட வேண்டும் என்ற ஒரு ஆவல் தான்.

அன்பு எதிர்பார்த்தபடியே ஆனந்தி அன்புவின் வீட்டுக்கு வந்து விட்டால். அது மட்டும் இல்லாமல் அன்புவின் அம்மாவே அவளை வீட்டுக்கு அழைத்தது தான் இதில் பெரிய சர்ப்ரைஸ். இது ஒரு பக்கம் இருக்க நேற்றைய எபிசோடில் மித்ரா தன்னுடைய அடுத்த சதி திட்டத்தை ஆரம்பித்து விட்டாள்.

சதி வேலையை ஆரம்பித்த மித்ரா

மகேஷ் ஆனந்தியை உருகி உருகி காதலிப்பது மித்ராவுக்கு தெரியும். அவனுக்கு எங்கு அடிச்சா எப்படி வலிக்கும்னு சரியா புரிஞ்சுகிட்டு அப்படி காய் நகர்த்தி இருக்கிறாள். மகேஷிடம் ஆனந்தி, அன்புவிடம் நெருங்கி பழகுவதாகவும், அன்புக்கு ஆனந்தி மேல் காதல் இருந்தால் என்ன செய்வது என எரிகிற நெருப்பில் எண்ணெயை ஊற்றுகிறாள்.

ஒரு பக்கம் மகேஷுக்கு அன்பு மீது அதீத நம்பிக்கை இருந்தாலும் ஆனந்தி மீதான காதல் கண்ணை மறைக்கத்தான் செய்கிறது. இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஆனந்தி அன்புவின் குடும்ப புகைப்படத்தை சர்ப்ரைஸ் ஆக அவனுக்கும் அவன் அம்மாவுக்கும் கொடுக்கிறாள்.

இதனால் அன்புவின் அம்மா ரொம்பவே மனம் நெகிழ்ந்து போகிறார். அதுமட்டுமில்லாமல் வந்திருக்கும் எல்லோருக்கும் ஆனந்தி சாப்பாடு சமைத்து கொடுத்ததால் மீது பெரிய அளவில் ஈர்ப்பு வந்துவிட்டது. நீயும் எங்கள் வீட்டில் ஒரு ஆள் தான் இனி என சொல்கிறார்.

இது அன்புக்கு உண்மையிலேயே மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுக்கிறது. இனி அன்பு ஆனந்தியை காதலிக்கிறேன் என அம்மாவிடம் சொன்னாலும் அவர் திருமணத்திற்கு ஓகே சொல்லிவிடுவார் போல தோன்றுகிறது. ஆனால் இடையில் மித்ரா மகேசை வைத்து பெரிய அளவில் பிளான் போட்டு என்ன செய்யப் போகிறாள் என இனி தான் தெரியும்.

சிங்க பெண்ணில் சமீபத்தில் நடந்த சம்பவங்கள்

Next Story

- Advertisement -