நடிகைக்கு எம்ஜிஆர் கொடுத்த 40 ஏக்கர் நிலம்.. இன்று வரை புரியாத புதிராக இருக்கும் சர்ச்சை

MGR: மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் வாரி வழங்கும் வள்ளல் என்றே இன்று வரை போற்றப்படுகிறார். அவருக்கு கொடுத்து கொடுத்து சிவந்த கரம் என்று கூட சொல்வதுண்டு. அப்படி மக்கள் போற்றும் தலைவனாக இருந்த அவரை சுற்றி ஒரு சில சர்ச்சைகளும் இருந்து வருகிறது. அவருடைய ராமாவரம் தோட்டம் தொடங்கி, கொடுத்த தானம் வரையும் சர்ச்சையாக பேசப்பட்டு தான் வருகிறது.

எம்ஜிஆர் மற்றும் ஒரு சில நடிகைகளுக்கு இடையே இருந்த உறவு பற்றி இன்று வரை நிறைய கதைகள் பேசப்படுவது உண்டு. ஆனால் அந்தக் கதைகள் எதற்குமே ஆதாரப்பூர்வமான சாட்சிகள் என்று எதுவும் கிடையாது. எம்ஜிஆர் உடன் இருந்தவர்கள் மற்றும் அவரைச் சுற்றிய கூட்டத்திலிருந்து யாராவது ஒருவர் சொன்ன விஷயம் தான் பின்பு எல்லாம் மீடியாக்களாலும் பேசப்பட்டு இருக்கிறது. அப்படி இன்றுவரை பேசப்படும் விஷயம்தான் எம்ஜிஆர் கொடுத்த 40 ஏக்கர் நிலம்.

Also Read:எம்ஜிஆர் கழுத்திலிருந்த குண்டு நீக்கப்பட்டதா இல்லையா?. பல வருட ரகசியத்தை போட்டு உடைத்த செல்ஃபி சிவக்குமார்

எண்பதுகளின் காலகட்டத்தில் தொடங்கி 90 வரை தமிழ் சினிமாவை ஆட்சி செய்து வந்த நடிகைகள் தான் அம்பிகா மற்றும் ராதா. அக்கா தங்கையான இவர்கள் இருவருக்குமே தமிழ் சினிமா கை கொடுத்தது. ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் முக்கிய ஹீரோக்களுடன் இவர்கள் இருவரும் தான் மாறி மாறி நடித்துக் கொண்டிருப்பார்கள். ஒரே நேரத்தில் பல மொழி படங்களிலும் நடிக்கும் அளவுக்கு பிசியாக இருந்தார்கள்.

தானமாக கொடுத்த 40 ஏக்கர் நிலம்

மறைந்த மக்கள் திலகம் எம்ஜிஆர் அப்போது முதலமைச்சராக இருந்த சமயம். அம்பிகா மற்றும் ராதாவின் அம்மா சரஸ்வதி எம்ஜிஆரை நேரில் சந்தித்திருக்கிறார். அப்போது அவரிடம் அழுது புலம்பி பேசி, அவருடைய மனசை கரைய வைத்து 40 ஏக்கர் நிலத்தை எழுதி வாங்கி விட்டதாக தெரிகிறது. அதிலும் இந்த இடம் அரசுக்கு சொந்தமான இடம் என்று சொல்லப்படுகிறது.

அப்போதைய காலகட்டத்தில் ஸ்டூடியோ தான் சினிமாவிற்கு அடிப்படையான விஷயமாக இருந்தது. அம்பிகா மற்றும் ராதா சகோதரிகள் அந்த இடத்தில் ஸ்டுடியோவை கட்டி ஏ ஆர் எஸ் கார்டன் என பெயர் வைத்திருக்கிறார்கள். இந்த ஸ்டூடியோவை திறந்து வைத்ததே மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் அவர்கள் தான்.

தற்போது இந்த ஸ்டூடியோவை மாற்றி நட்சத்திர ஹோட்டல் அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த காலகட்டத்தில் இந்த விஷயம் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது. இருந்தாலும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, இந்த விஷயத்தை எந்த இடத்திலும் பேசி எம்ஜிஆரின் பெயரை நான் கெடுக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டதாக கூட நிறைய பத்திரிகைகள் அப்போது எழுதியிருக்கிறார்கள்.

Also Read:2023ல் எல்லாரையும் திரும்பிப் பார்க்க வைத்த 6 இயக்குனர்கள்.. சிவாஜி பேத்தியவே வளைத்து போட்ட ஆதிக்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்