பெண் வேடத்தில் நடித்த எம்ஜிஆர், சிவாஜி.. புகைப்படத்தை பார்த்து பெண்களே பொறாமை படும் அழகு

ஒரு காலத்தில் எம்ஜிஆர், சிவாஜி என்ற இரு ஜாம்பவான்கள் தான் தமிழ் சினிமாவை ஆட்சி செய்து வந்தார்கள். அதன் பிறகு வந்த பல நடிகர்களுக்கும் இவர்கள்தான் முன்னோடியாக இருந்திருக்கிறார்கள். அந்த வகையில் ஏராளமான திரைப்படங்களில் நடித்திருக்கும் அவர்களுக்கென மிகப் பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.

அவர்களின் நடிப்புத் திறமையை நிரூபிக்கும் வகையில் ஏராளமான திரைப்படங்கள் இருக்கின்றன. அதேபோன்று பல்வேறு விதமான கதாபாத்திரங்களிலும் அவர்கள் நடித்திருக்கிறார்கள். அதில் முக்கியமானது எம்ஜிஆர், சிவாஜி இருவரும் பெண் வேடமணிந்து நடித்தது தான்.

Also read:தமிழ் சினிமா வரலாற்றில் முதல் டபுள் ஆக்சன் ரோல்.. எம்ஜிஆர், சிவாஜிக்கு முன்பே அசத்திய ஹீரோ

இது பலருக்கும் ஆச்சரியமான தகவலாக கூட இருக்கலாம். ஏனென்றால் சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகர்கள் பலரும் இதுபோன்று பெண் வேடமணிந்து நடிப்பதை விரும்ப மாட்டார்கள். ஆனால் எம்ஜிஆர், சிவாஜி இருவரும் ஒரே ஒரு படத்தில் மட்டும் பெண் வேடத்தில் நடித்திருக்கிறார்கள்.

அந்த வகையில் எம்ஜிஆர் காதல் வாகனம் என்ற திரைப்படத்தில் லேடி கெட் அப் போட்டு நடித்திருக்கிறார். எம்ஜிஆர், ஜெயலலிதா, மனோரமா, நாகேஷ் போன்ற பலர் நடிப்பில் 1968 ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தில் எம்ஜிஆர் ஒரு முக்கியமான காட்சியில் பெண் வேடத்தில் தோன்றுவார்.

mgr-actor
mgr-actor

Also read:தமிழ் சினிமாவிற்கு இதுவரை கிடைக்காத மாற்று நடிகர்.. சிவாஜியையே வளர்த்து விட்ட ஜாம்பவான்

ஆரம்பத்தில் இது குறித்து அவரிடம் கூறிய போது முடியவே முடியாது என்று மறுத்துவிட்டாராம். அதன் பிறகு அந்த காட்சி ஒரு நகைச்சுவைக்காக தேவைப்படுகிறது என்றவுடன் அவர் சம்மதித்தாராம். படம் வெளியான பிறகு அந்த காட்சி பலராலும் ரசிக்கப்பட்டது.

அதேபோன்று சிவாஜியும் குங்குமம் என்ற திரைப்படத்தில் பெண் வேடமிட்டு நடித்திருக்கிறார். அதில் கலியுக கண்ணகி என்ற கதாபாத்திரத்தில் நடித்து அவர் அசத்தி இருப்பார். இந்த கதாபாத்திரத்தை சிவாஜியிடம் கூறிய போது அவர் மறுப்பேதும் கூறாமல் ஆர்வத்துடன் நடித்தாராம்.

sivaji-tamil-actor
sivaji-tamil-actor

ஒருவகையில் சிவாஜி ரொம்பவும் ஆசைப்பட்டு நடித்த கதாபாத்திரமும் இதுதான். எல்லாவிதமான கேரக்டரையும் நடித்துப் பார்த்து விட வேண்டும் என்று நினைக்கும் சிவாஜி பெண் வேடத்தில் நடித்தது பலரையும் ரசிக்க வைத்தது. இந்த படங்களுக்குப் பிறகு எம்ஜிஆர் மற்றும் சிவாஜி இருவரும் வேறு எந்த படத்திலும் பெண் வேடமிட்டு நடிக்கவில்லை.

Also read:எம் ஜி ஆரை வள்ளலாக்கிய அந்த நடிகர் யார் தெரியுமா?.. மரணத்தின் போது சொத்து கூட இல்லை