தமிழ் சினிமா வரலாற்றில் முதல் டபுள் ஆக்சன் ரோல்.. எம்ஜிஆர், சிவாஜிக்கு முன்பே அசத்திய ஹீரோ

சினிமாவை பொருத்தவரை இப்போதெல்லாம் பல்வேறு விதமான டெக்னாலஜிகள் வந்துவிட்டது. ஆனால் அந்த காலத்தில் எல்லாம் அப்படி கிடையாது. சில தொழில்நுட்பங்களை படத்தில் பார்க்கும் போது அது மக்களுக்கு மிகுந்த வியப்பை கொடுக்கும். அந்த வகையில் முதன் முதலாக டபுள் ஆக்சன் கேரக்டர் அறிமுகமானபோது ரசிகர்கள் அதை வியந்து பார்த்தனர்.

அது எப்படி ஒரே நபர் இப்படி நடிக்க முடியும் என்றும், ஒருவேளை அந்த நடிகர் ட்வின்ஸா என்றும் கூட அப்போது மக்கள் பரபரப்பாக பேசியதுண்டு. அந்த வகையில் தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதன்முதலாக இரட்டை வேட கதாபாத்திரங்கள் எப்போது அறிமுகமானது என்று பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை.

Also read: ‘A’ சர்டிபிகேட் வாங்கிய முதல் தமிழ் படம்.. சிவாஜிக்கு முன்னரே எம்ஜிஆருக்கு கொடுத்த சென்சார் போர்டு

எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் போன்ற பல நடிகர்களும் டபுள் ஆக்சன் கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஆனால் அவர்களுக்கெல்லாம் முன்னோடியாக ஒரு நடிகர் இருந்துள்ளார். அவர் வேறு யாருமல்ல நடிகர், பாடகர், தயாரிப்பாளர் என்று பல்வேறு திறமைகளை கொண்ட பி யு சின்னப்பா தான்.

அவர்தான் முதன் முதலாக இரட்டை வேட கதாபாத்திரங்களை ஏற்ற நடிகர். 1940 ஆம் ஆண்டு மார்டன் தியேட்டர்ஸ் சார்பில் வெளிவந்த உத்தமபுத்திரன் என்ற திரைப்படத்தில் தான் பி யு சின்னப்பா இரு வேடங்களில் நடித்திருந்தார். ஆங்கில நாவலான தி மேன் இன் த அயன் மாஸ்க் என்ற கதையை தழுவி இப்படம் எடுக்கப்பட்டிருந்தது.

Also read:எம் ஜி ஆரை வள்ளலாக்கிய அந்த நடிகர் யார் தெரியுமா?.. மரணத்தின் போது சொத்து கூட இல்லை

டி ஆர் சுந்தரம் இயக்கிய இந்த படத்தில் பி யு சின்னப்பா விக்ரம பாண்டியன், சொக்கநாத பாண்டியன் என்ற இரு கதாபாத்திரங்களில் நடித்திருப்பார். மேலும் டி எஸ் பாலய்யா இப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார். அது மட்டுமல்லாமல் என் எஸ் கிருஷ்ணன் மற்றும் டி ஏ மதுரம் இப்படத்தில் கௌரவ தோற்றத்தில் நடித்திருந்தனர்.

இப்படம் வெளியான சமயத்தில் ரசிகர்கள் பலரும் அந்த இரட்டை கதாபாத்திரங்களை பார்த்து ஆச்சரியப்பட்டு போனார்களாம். அதனாலேயே இப்படம் எதிர்பார்க்காத அளவு வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்துதான் எம்ஜிஆர், சிவாஜி போன்றவர்களும் இது போன்ற இரட்டை வேட கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தது குறிப்பிடத்தக்கது.

Also read:நடிப்பில் சிவாஜியை தூக்கி சாப்பிட்ட நடிகர்.. தேசிய விருது மறுக்கப்பட்ட அவலம்!