எம் ஜி ஆரை வள்ளலாக்கிய அந்த நடிகர் யார் தெரியுமா?.. மரணத்தின் போது சொத்து கூட இல்லை

mgr
mgr

சமீபத்தில் கொடை என்னும் திரைப்படத்தின் ஆடியோ ரிலீஸ் நடைபெற்ற போது தயாரிப்பாளர் கே என் ராஜன் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய ராஜன் தன்னுடைய பழைய கால நினைவுகளையும், மக்கள் திலகம் எம் ஜி ஆர் பற்றியும் பகிர்ந்து கொண்டார்.

கே என் ராஜன் இப்போது யூடியூப் சேனல்களில் இன்டெர்வியூக்கள் கொடுத்து வருகிறார். தயாரிப்பாளர்களுக்கு திரைத்துறையில் நடக்கும் இன்னல்களை பற்றியும், நடிகர்கள்-நடிகைகள் பற்றியும் பல அனுபவங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

Also Read: கௌதம் மேனனின் தோல்வி படத்தை சரிகட்ட சிறுத்தை சிவா படத்தில் நடித்த அஜித்.. உண்மையை போட்டு உடைத்த பிரபலம்!

தயாரிப்பாளர் கே என் ராஜன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள 5000 ரூபாய் வாங்குகிறார். அந்த 5000 த்துடன் தன்னுடைய சொந்த காசு 10,000 சேர்த்து 15,000 ரூபாயாக படிக்க கஷ்டப்படும் குழந்தைகளுக்கு கொடுத்து வருகிறார். இவர் கிட்டத்தட்ட 1,00,000 க்கும் மேல் மாணவர்களுக்கு நன்கொடையாக கொடுத்து இருக்கிறார். இவரை பார்த்து நடிகர், நடிகைகளும் உதவி செய்ய முன்வர வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

மேலும் பேசிய கே என் ராஜன் மக்கள் திலகம் எம் ஜி ஆரின் கொடைக்குணத்தை பற்றி பேசியிருக்கிறார். MGR திரைத்துறையில் கஷ்டப்படுபவர்களுக்கு தாமாகவே முன்வந்து பல உதவிகளை செய்து வந்தார். அவருடைய படங்களில் தானம், தர்மத்தை வலியுறுத்தி பேசியிருப்பார்.

Also Read: ‘A’ சர்டிபிகேட் வாங்கிய முதல் தமிழ் படம்.. சிவாஜிக்கு முன்னரே எம்ஜிஆருக்கு கொடுத்த சென்சார் போர்டு

கொடை வள்ளலாக இருந்த எம் ஜி ஆருக்கே ஒரு நடிகர் தான் அந்த குணத்தையே சொல்லி கொடுத்திருக்கிறார். அவர்தான் கலைவாணர் NS கிருஷ்ணன். MGR முதலில் NS கிருஷ்ணனின் நாடக குழுவில் தான் நடித்துக் கொண்டிருந்தார். பின்னாளில் NSK, எம் ஜி ஆரிடம் உனக்காக டிக்கெட் வாங்கி உன்னை பார்க்க வரும் ரசிகர்கள் ஏழ்மையானவர்கள், எனவே உன் சம்பளத்தில் அவர்களுக்கு உதவி செய் என்று சொன்னாராம்.

இதனாலேயே MGR பல மேடைகளில் என்னை வள்ளலாக்கியது NSK தான் என்று கூறியிருக்கிறாராம். NSK வும் திரைத்துறையில் பல பேருக்கு உதவியிருக்கிறாராம். இவரும் நடிகர் எம்.கே.டி அவர்களும் ஒரு கொலை வழக்கில் சிக்கி தன்னுடைய சொத்துக்களை எல்லாம் இழந்துவிட்டாராம். NSK சாகும் போது அவரிடம் ஒன்றுமே இல்லை என ராஜன் கூறியிருக்கிறார்.

Also Read: சிவாஜிக்கு பட்ட நன்றி கடனால் எம்ஜிஆரை ஒதுக்கிய தயாரிப்பாளர்.. வழிவிட்டு வாழவைத்த புரட்சித்தலைவர்

Advertisement Amazon Prime Banner