பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் பாரதிகண்ணம்மா வரை.. சின்னத்திரையை கிழித்து தொங்கவிட்ட மீம்ஸ்கள்!

சினிமாவை தாண்டி சின்னத்திரை நிகழ்ச்சிகளையும் நாடகங்களையும் பார்ப்பதற்கு என்றே தனி ரசிகர் கூட்டம் உண்டு. அந்த வகையில் அனுதினமும் ஒளிபரப்பப்படும் சீரியல்களை இல்லத்தரசிகள் முதல் இளைஞர்கள் வரை கண்டு களிக்கின்றனர். ஆகையால் இவர்களுக்கு ஒரு நாள் கூட சீரியல் பார்க்காவிட்டாலும், சீரியலில் என்ன நடந்திருக்குமோ என்றும் சிலர் பதட்டப்படுவதும் உண்டு.

அப்படிப்பட்ட சீரியல்களை பார்க்கும் தீவிர ரசிகர்களை நெட்டிசன்கள் தாறுமாறாக மீம்ஸ் போட்டு கிண்டல் அடித்துள்ளனர். இவர்கள் டிஆர்பியில் டாப் ரேட்டிங்கில் இருக்கும் சீரியல்களை கூட விட்டு வைப்பதில்லை.

இதில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் சமீபத்தில் திடீரென்று லக்ஷ்மி அம்மா இறந்து விடுவார்.  அதை நெட்டிசன்கள், ‘நேற்று பாண்டியன் ஸ்டோரில் பார்க்கும்போது நல்லாதான் இருந்தீங்களே!’ என்று வடிவேலு பேசுவதுபோல் கிண்டல் அடித்துள்ளனர்.

pandianstores-memes-cinemapettai
pandianstores-memes-cinemapettai

அத்துடன் பாவம் கணேசன் சீரியலை பார்க்கும் நாங்கள் தான் பாவம் என்று விஜய் டிவியின் பாவம் கணேசன் சீரியலை கலாய்த்துள்ளனர். அதேபோன்று ராஜா ராணி2 சீரியலில் சந்தியா போலீஸ் கெட்டப்பை வைத்து நெட்டிசன்கள் பங்கம் செய்துள்ளனர்.

serial-memes-cinemapettai
serial-memes-cinemapettai

மேலும் கொரோனா பரவலால் சினிமா படப்பிடிப்புகளை நிறுத்துவதற்கு பதிலாக சீரியல் படப்பிடிப்புகளை நிறுத்தி இருந்தால் உங்களுக்கு புண்ணியமா போயிருக்குமே என்று வடிவேலு புகைப்படத்தை வைத்து காமெடி அடித்துள்ளனர்.

serial-memes-cinemapettai
serial-memes-cinemapettai

மேலும் விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டிங்கை எகிறவிடும் பாரதிகண்ணம்மா சீரியலில் கண்ணம்மா ஆவேசத்துடன் நடித்துள்ள காட்சியை வைத்து, ‘கொடுத்த காசுக்கு மட்டும் நடிச்சா போதும்’ என்று கண்ணம்மாவை நக்கலடித்துள்ளனர்.

bharathi-kannamma-memes-cinemapettai
bharathi-kannamma-memes-cinemapettai

மேலும் ‘ஒரு சீரியலையே நான்கு ஐந்து வருஷம் ஓட்ற ஊருடா இது’ என தளபதி விஜய் பேசிய வசனத்தை வைத்து நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டுள்ளனர்.

serial-memes1-cinemapettai
serial-memes1-cinemapettai

அத்துடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்களில் இடம்பெறும் மீனா மற்றும் முல்லை கதாபாத்திரத்தை வைத்து, ‘இந்த மாதிரி அண்ணி கிடைக்கிறது தான் லக்கு’ என்று மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி பிரியாணியில் பீஸ் இருந்தால் அதுதான் லக்கு என்று வசனம் பேசி இருப்பதை ஒப்பிட்டு நெட்டிசன்கள் தாறுமாறாக மீம்ஸ் போட்டுள்ளனர்.

pandian-stores-memes-cinemapettai
pandian-stores-memes-cinemapettai

இவ்வாறு நெட்டிசன்கள் சின்னத்திரையை கலாய்த்து இருக்கும் மீம்ஸ்கள் அனைத்தும் இணையத்தில் தாறுமாறாக வைரலாகி வருகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்