ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

சாப்பாட்டுக்காக அடித்துக் கொள்ளும் பிக் பாஸ் வீடு.. செம்ம காண்டில் வெளியேறிய மாயா, கூல் சுரேஷ்

Bigg Boss season 7 Tamil: அக்டோபர் ஒன்றாம் தேதி தொடங்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சி 25 நாட்களை கடந்து இருக்கிறது. 26வது நாளுக்கான ப்ரோமோ வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரல் ஆகி இருக்கிறது இதற்கு முக்கிய காரணம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளரான மாயா மற்றும் கூல் சுரேஷ் இருவரும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருப்பதுதான்.

எந்த சீசனிலும் இல்லாத வகையில் இந்த ஏழாவது சீசன் பெரிய போராட்டக் களமாகவே இருக்கிறது. ஒன்னுக்கு ரெண்டு வீடு என கொளுத்தி போட்டு விட்டார் பிக் பாஸ். அது காட்டு தீயாக எரிந்து கொண்டு இருக்கிறது. கேப்டன் தன்னை அதிகம் கவராதவர்கள் என ஒரு ஆறு பேரை ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பி வைப்பது வழக்கமாக இருக்கிறது. இதனாலேயே வாரத்தின் முதல் நாளே சண்டை ஆரம்பம் ஆகி விடுகிறது.

பிக் பாஸ் கொடுக்கும் டாஸ்க்களில் பெரிய பாஸ் வீடு ஜெயிக்கிறதா அல்லது சின்ன பாஸ் வீடு ஜெயிக்கிறதா என்பதே மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. இன்று நடத்தப்பட்ட டாஸ்க்கில் ஸ்மால் பாஸ் வீடு ஜெயித்து விட்டது. இதனால் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் யாருக்கும் உணவு இல்லை என பிக் பாஸ் அறிவித்துவிட்டார். இதனால் கூல் சுரேஷ் மற்றும் மாயா பயங்கர காண்டாகி விட்டார்கள்.

ஸ்மால் பாஸ் வீட்டிலிருந்த நிக்ஸனிடம் மாயா நாங்கள் உங்கள் வீட்டிற்கு வரலாமா என்று கேட்க, அவரும் ஓகே சொல்லிவிட்டார். உடனே மாயா மற்றும் கூல் சுரேஷ் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு சென்று விட்டன.ர் இந்த வார கேப்டன் ஆக இருக்கும் பூர்ணிமா பனிஷ்மெண்டில் இருக்கும் நீங்கள் சாப்பாட்டிற்காக ஸ்மால் பாஸ் வீட்டிற்கு செல்வது தப்பு என சொல்ல, மாயா மட்டும் பூர்ணிமாவுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு விட்டது.

சண்டை வந்தது தான் சாக்கு என்று ரவீனா ஸ்மால் பாஸ் வீட்டிற்கு பறந்துவிட்டார். அங்கே மணி இருப்பதால்தான் ரவீனா சென்றிருக்கிறார் என்பது தெரிந்த விஷயம் தான். இரண்டு நாட்களாக ரவீனா நன்றாக விளையாடுகிறார் என பார்வையாளர்கள் சொல்லி வந்த நேரத்தில் மீண்டும் பழைய குருடி கதவ தெரடி என்பது போல் சமயத்தை தனக்கு சாதகமாக வைத்து மணியிடம் சென்று விட்டார்.

ஏற்கனவே இந்த சீசனில் விளையாடும் போட்டியாளர்கள் ரொம்பவும் மந்தமாக இருக்கிறார்கள் என பார்வையாளர்களிடையே ஒரு கருத்து இருக்கிறது. மேலும் இந்த சீசனில் விளையாட வந்திருப்பவர்கள் யாருக்குமே டைட்டில் கார்டு வெல்லும் அளவுக்கு திறமை இல்லை என்றும் சொல்லி வருகின்றனர். இதுபோன்ற ஒரு சமயத்தில் இவர்கள் சாப்பாட்டிற்காக அடித்துக் கொள்வது பார்வையாளர்களை ரொம்பவும் வெறுப்படையச் செய்திருக்கிறது.

- Advertisement -

Trending News