17 வயதிலேயே திருமணம், ஏகப்பட்ட லவ் பிரேக்கப்.. பிக்பாஸ் நடிகையைப் பற்றி புட்டு புட்டு வைத்த முன்னாள் காதலன்

இப்போது இருக்கும் காலகட்டத்தில் லவ் பிரேக்கப் என்பது சாதாரணமான விஷயமாக மாறிவிட்டது. அதிலும் நடிப்பு துறையில் இருக்கும் நடிகைகளுக்கு திருமணம், விவாகரத்து, லவ் பிரேக்கப் போன்றவை ரொம்பவும் சகஜமாக இருக்கிறது. அதில் பிக்பாஸ் நடிகை ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை தற்போது பலரையும் அதிர வைத்திருக்கிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல போட்டியாளர்கள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். அதில் சீரியல்கள் மூலம் பிரபலமான நடிகை ஆயிஷாவும் ஒருவர். ஆரம்பத்திலேயே பிக் பாஸ் வீட்டில் இவருடைய நடவடிக்கைகள் யாருக்கும் பிடிக்காமல் இருந்தது. ஏனென்றால் அதிகப்படியாக குரலை உயர்த்தி பேசுவது, சண்டை போடுவது என்று அவருடைய செயல்கள் அனைத்தும் வெறுப்பை சம்பாதித்து வருகிறது.

Also read:பொண்ணுங்களை தடவி ரொமான்ஸ் செய்தததற்கு சம்பளத்தை வாரி கொடுத்த பிக்பாஸ்.. கொடுத்த வச்ச கோளாறு

அதிலும் கடந்த வாரம் கமல் முன்பு அவர் மரியாதை குறைவாக பேசியதும் ரசிகர்களை கொதிப்படைய வைத்துள்ளது. இந்நிலையில் ஆயிஷாவின் முன்னாள் காதலன் அவரைப் பற்றிய பல உண்மைகளை புட்டு புட்டு வைத்துள்ளார். அதாவது கேரளாவை சேர்ந்த ஆயிஷாவுக்கு 17 வயதிலேயே திருமணம் நடந்து அது தோல்வியில் முடிந்திருக்கிறது. அதன் பிறகு மீண்டும் ஒரு திருமணம் செய்த அவருக்கு அதுவும் நிலைக்கவில்லை.

அதன் பிறகு அவருக்கு ஏகப்பட்ட காதல் இருந்ததாகவும், இப்போது வரை அவர் முதல் திருமணத்தில் இருந்து விவாகரத்து பெறவில்லையாம். சென்னையில் கல்லூரியில் படிக்கும் போது ஒரு உதவி இயக்குனரை விரும்பிய ஆயிஷா அவருக்காக வீட்டை விட்டும் ஓடி வந்திருக்கிறார். கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் அவருடன் காதலில் இருந்து ஆயிஷாவுக்கு சீரியல் வாய்ப்புகள் வாங்கி கொடுத்ததெல்லாம் அவருடைய முன்னாள் காதலர் தானாம்.

Also read:ஆண்டவர் மீதே குறை சொன்ன சில்வண்டு.. ஓவர் ஆட்டிட்யூட்டால் வெறுப்பை சம்பாதித்த பிரபலம்

பிறகு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சத்யா தொடரில் நடிக்க ஆரம்பித்த பொழுது தன்னுடைய காதலரை பிரேக் அப் செய்துவிட்டு அதே சீரியலின் ஹீரோவான விஷ்ணுவுடன் நெருங்கி பழகி இருக்கிறார். ஆனால் அதுவும் நீடிக்காமல் பிரேக்கப்பில் முடிந்திருக்கிறது. அதன் பிறகு ஆயிஷா தற்போது ஒருவரை காதலித்து வருகிறார்.

அவரும் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர். ஆனால் இந்த காதலும் எத்தனை நாளைக்கு நீடிக்கும் என்று தெரியவில்லை. ஏற்கனவே வெறுப்பை சம்பாதித்து வரும் ஆயிஷா தற்போது வெளிவந்திருக்கும் உண்மைகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். மேலும் அவருடைய வாழ்க்கையின் மறுபகுதி ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சியாக்கி இருக்கிறது.

Also read:மன்மத ராசாவை வீட்டை விட்டு துரத்திய ஆண்டவர்.. வெளியேறும் போதும் செய்த சில்மிஷ சேட்டை