மன்மத ராசாவை வீட்டை விட்டு துரத்திய ஆண்டவர்.. வெளியேறும் போதும் செய்த சில்மிஷ சேட்டை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோட் பயங்கர மாஸாக இருந்தது. அதிலும் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த அந்த தருணம் எதிர்பார்க்காத அளவுக்கு இருந்தது. அதாவது இந்த வார எலிமினேஷனில் அனைவரும் எதிர்பார்த்தபடியே அசல் வீட்டை விட்டு வெளியேறினார்.

பிக்பாஸ் வீட்டில் பெண்களிடம் சில்மிஷம் செய்து கொண்டு எதற்கு இந்த வீட்டுக்குள் வந்தோம் என்றே தெரியாமல் இருந்த ஒரே போட்டியாளர் என்றால் அது அசல் மட்டும் தான். வீட்டில் இருக்கும் எல்லா பெண்களையும் உரசுவது, தடவுவது என்று எல்லை மீறி போய்க்கொண்டிருந்த அசலுக்கு இந்த வாரம் ரசிகர்கள் ஆப்பு வைத்தனர்.

Also read : நாமினேஷன் மூலம் பழிக்குப் பழி தீர்த்த ஹவுஸ் மேட்ஸ்.. இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் நபர்

எதற்காக வீட்டை விட்டு வெளியேறுகிறோம் என்றே தெரியாமல் பிக் பாஸ் மேடைக்கு வந்த அவரை கமல் நன்றாகவே வச்சு செய்தார். அதிலும் நீங்க இந்த நிகழ்ச்சிக்கு வந்த நோக்கம் நிறைவேறி விட்டதா என்று மறைமுகமாக ஆண்டவர் அவரை கிண்டலடித்தது பலரையும் ரசிக்க வைத்தது. இதைத்தானே ரசிகர்களும் எதிர்பார்த்தார்கள்.

ஆனால் தன்னை கிண்டல் செய்கிறார் என்றே தெரியாமல் என்னோட நோக்கம் இன்னும் முடியல, ஆனாலும் இருந்த வரைக்கும் ஹாப்பியா இருந்தேன் என்று அசல் கூறியது தான் பயங்கர காமெடி. தற்போது இந்த நிகழ்வு தான் சோசியல் மீடியாவில் வைரலாக சென்று கொண்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் வீட்டை விட்டு கிளம்பும்போது கூட அசல் நிவாவிடம் சில்மிஷம் செய்த விஷயமும் பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.

Also read : என்ன ஜென்மம் டா நீ கைய கடிக்கிற, கட்டிப்பிடிக்கிற.. காமவெறியில் அடுத்தடுத்து வெளிவரும் அசலின் வீடியோ

பிக் பாஸ் வீட்டுக்குள் அசல் உடன் தனி உலகத்தில் சுற்றி திரிந்த நிவா அவர் எலிமினேட் செய்யப்பட்டு விட்டார் என்று தெரிந்ததுமே கண்ணீர் விட்டு கதறினார். சும்மாவே அவரை கடிப்பது, கொஞ்சுவது என்று இருக்கும் அசல் ஆறுதல் சொல்வதற்காக அவரை கட்டி அணைத்தபடி நின்று கொண்டிருந்தார். அப்போது அவர் அப்படி இப்படி இருக்கணும்னா சீக்கிரம் வெளியில வா என்று பேசியது அருவெறுப்பின் உச்சம்.

இது சோசியல் மீடியாவில் கடும் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இப்படி வக்கிரம் பிடித்த ஒரு மோசமான நபரை எதற்காக பிக்பாஸ் வீட்டிற்குள் அனுமதித்தார்கள் என்றும் ரசிகர்கள் கொதித்து வருகின்றனர். எது எப்படியோ இனிமேல் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பெண்கள் பாதுகாப்பாக இருப்பார்கள். அந்த வகையில் அசல் வீட்டை விட்டு வெளியேறியதை ரசிகர்கள் தீபாவளி போல் கொண்டாடி வருகின்றனர்.

Also read : மன்மத குஞ்சாக மாறிவரும் அசல்.. பெண்களை தடவி பார்க்கும் புகைப்படத்தை வெளியிட்ட நெட்டிசன்கள்

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்