நடிப்பே வேண்டாம் என ஒதுங்கிய மார்க்கண்டேயன்.. ராமராஜன், மோகன் போல் இல்லாமல் ஒதுங்கும் சீனியர்

70, 80களில் கொடி கட்டி பறந்த சில நடிகர்கள் தற்போது சினிமாவே வேண்டாம் என ஒதுங்கி இருந்தார்கள். மேலும் பலமுறை வாய்ப்பு வந்தும் அதை ஏற்க மறுத்தனர். ஏனென்றால் நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று அடம்பிடித்த இவ்வாறு வரும் வாய்ப்பை தவறவிட்டு வந்தனர்.

ஆனால் பிரபு, சத்யராஜ், கார்த்திக் போன்ற நடிகர்கள் தங்களுக்கு கிடைத்த கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை மகிழ்வித்து வந்தனர். ஆனால் ராமராஜன், மோகன் உள்ளிட்டோர் மீண்டும் ஹீரோவாக நடித்து சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளனர். அதாவது மோகன் ஹரா என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

Also Read :இப்போதுள்ள ட்ரெண்டுக்கு மாறி வரும் 5 ஹீரோக்கள்.. இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த ராமராஜன்

அதேபோல் ராமராஜனும் சாமானியன் என்ற படத்தில் நடித்த வருகிறார். ஆனால் தமிழ் சினிமாவின் மார்க்கண்டேயன் என்று அழைக்கப்படும் சிவகுமாருக்கு நடிக்க நிறைய அழைப்பு வந்தும் பட வாய்ப்பு மறுத்து வருகிறாராம். இவர் ஹீரோவாக பல படங்களில் நடித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து ஹீரோ, ஹீரோயினுக்கு அப்பா போன்ற முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்த வந்தார். ஆனால் சினிமாவில் இருந்த சில வருடங்களாக சுத்தமாக ஒதுங்கி விட்டார். இப்போதும் சிவகுமாருக்கு எக்கச்சக்க பட வாய்ப்புகள் வருகிறதாம்.

Also Read :சிவகுமாரை எதிர்த்து நிற்கும் மருமகள்.. 71 வயது நடிகருடன் ஜோடி சேரும் ஜோதிகா

ஆனால் எல்லா வாய்ப்பையுமே சிவக்குமார் மறுத்து வருகிறாராம். மேலும் அவருடைய இரண்டு வாரிசுகளுமே சினிமாவில் தற்போது கொடிகட்டி பறக்கிறார்கள். சூர்யாவும் பல படங்களை கைவசம் வைத்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் கூட அவருக்கு தேசிய விருது கிடைத்தது.

அதேபோல் காத்தியும் தற்போது வந்தியதேவனாக பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து அசத்தியிருந்தார். மேலும் தற்போது சர்தார் படத்திலும் நடித்துள்ளார். மேலும் சிவகுமாரின் மகளும் சினிமாவில் சில பாடல்களை பாடி வருகிறார். இவ்வாறு சினிமாவுக்காக மூன்று வாரிசுகளை கொடுத்துள்ளதால் சிவக்குமார் நடிப்பில் இருந்த விலகி உள்ளார்.

Also Read :சூர்யாவின் உண்மை பெயரை மாற்றிய நபர்.. அனுமதிக்காக சிவகுமாரிடம் போன சிபாரிசு

Next Story

- Advertisement -