மார்க் ஆண்டனி படத்தில் இணைந்து வெற்றி கண்ட 4 முரட்டு சிங்கிள்.. விநாயகரும் லிஸ்டில இருக்காரு!

Mark Antony: சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கும் படம் தான் மார்க் ஆண்டனி. இந்த படத்தில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் பல சஸ்பென்சுகள் நிறைந்து இருக்கிறது. படத்தின் வெற்றிக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்குமோ என ரசிகர்களை யோசிக்க வைக்கும் படியாக அந்த விஷயம் இருக்கிறது.

அதாவது சமீபகாலமாக விஷால் நடித்த அனைத்து படங்களுமே தோல்வியை தழுவி வந்தது. அவர் என்னதான் முட்டி மோதி படத்தை வெளியிட்டாலும் எதிர்பார்த்த அளவு வெற்றி வாகை சூட முடியவில்லை. ஆனால் எஸ்ஜே சூர்யா உடன் விஷால் கூட்டணி போட்ட நிலையில் மார்க் ஆண்டனி படம் பட்டையை கிளப்பி வருகிறது.

Also Read : எஸ்ஜே சூர்யாவை டீலில் விட்ட வெங்கட் பிரபு.. விஜய் உடன் மோத போகும் ஹாண்ட்சம் வில்லன்

அதோடு மட்டுமல்லாமல் இந்த படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் முந்தைய படங்களை எடுத்துக் கொண்டாலும் பெரிய அளவில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு எதுவும் போகவில்லை. திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன், வெர்ஜின் மாப்பிள்ளை, பஹீரா போன்ற படங்களை கொடுத்தாலும் ரசிகர்களின் கவனத்தை பெறவில்லை.

ஆனால் மார்க் ஆண்டனி படம் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்து இருக்கிறது. இதில் என்ன ஆச்சரியப்படும் விஷயம் என்றால் விஷால், எஸ்ஜே சூர்யா, இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் முரட்டு சிங்கிளாக இருக்கக்கூடியவர்கள். அதுவும் எஸ்ஜே சூர்யாவுக்கு 55 வயதான நிலையில் விஷாலுக்கு 46 வயதாகிறது.

Also Read : வெற்றிமாறனின் சூப்பர் ஹிட் படத்தை பிடுங்கிய தனுஷ்.. எஸ்ஜே சூர்யா கூட்டணியில் 50வது படம்

ஆனால் இப்போது வரை திருமணம் வேண்டாம் என்று இருவருமே இழுத்து அடித்து கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு முரட்டு சிங்கிளாக உருவான இந்த படத்தை விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு வெளியிட்டனர். விநாயகரும் பிரம்மச்சாரி என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

இவ்வாறு கடவுள் முதல் ஒட்டு மொத்தமாக பேச்சிலராக சேர்ந்து மார்க் ஆண்டனி படம் வெளியாகி வசூலை வாரி குவித்து வருகிறது. அதன்படி படம் வெளியாகி ஐந்து நாட்களிலேயே கிட்டத்தட்ட 55 கோடி வசூலித்து விட்டதாம். தொடர்ந்து படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் இந்த முரட்டு சிங்கிள் கூட்டணி இன்னும் பல கோடிகளை குவிக்க இருக்கிறது.

Also Read : 5வது நாளில் வசூல் வேட்டையாடிய விஷால்-S.J சூர்யா .. ஜவான் ஓரமா போங்க, ஆச்சரியப்படுத்திய மார்க் ஆண்டனி

- Advertisement -