வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

சினிமாவுக்கு வரவே கூடாது, சினிமா உனக்கு வேண்டாம்.. மாரிமுத்து மகனை தடுக்க இப்படி ஒரு காரணமா?

Actor Marimuthu: இன்றைய நாள் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் மிகவும் மோசமாக அமைந்தது. இதற்கான காரணம் என்னவென்றால் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பல பரிமாணங்களைக் கொண்ட மாரிமுத்து திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்த விஷயத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி கொண்டனர். எதிர்நீச்சல் தொடரின் முக்கிய தூணாக இருந்தவர்தான் மாரிமுத்து.

இனி ஆதி குணசேகரன் இல்லாத எதிர்நீச்சல் தொடரை நினைத்துக் கூட ரசிகர்களால் பார்க்க முடியாது. அவருடைய பேச்சு, பாவனை என அனைத்துமே தொடருக்கு பக்கபலமாக அமைந்தது. ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தை யாராலும் ஈடுகட்ட முடியாது என்பது நிதர்சனமான உண்மை. இந்த சூழலில் மாரிமுத்துவை பற்றி நிறைய செய்திகள் வெளியாகி இருக்கிறது.

Also Read : இனி அடுத்த எதிர்நீச்சல் குணசேகரன் இவர் தான்.. மாரிமுத்து சாயலில் இருப்பதால் திருச்செல்வம் எடுக்கும் முடிவு

அந்த வகையில் மாரிமுத்துக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார். ஆரம்பத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்து அதன் பிறகு படிப்படியாக மிகப்பெரிய உயரத்தை அடைந்தார். இந்த சூழலில் அவருடைய மகனுக்கும் சினிமாவில் வரவேண்டும் என்ற ஆசை பெரிதும் இருந்திருக்கிறது.

அதுவும் நடிகராக இல்லையாம், ஒளிப்பதிவாளராக பணியாற்ற வேண்டும் என்று ஆசைப்பட்டு இருக்கிறார். இதை தனது தந்தையிடமும் சொல்லி இருக்கிறார். ஆனால் மாரிமுத்து இதற்கு மறுப்பு தெரிவித்து மகனின் மனதை மாற்றி சில யோசனைகள் சொல்லி எம்பிஏ படிக்க வைத்திருக்கிறார்.

Also Read : துக்கம் தொண்டை அடைக்க செய்த 5 மாரடைப்பு மரணங்கள்.. விவேக் முதல் மாரிமுத்து வரை

இப்போது மாரிமுத்துவின் மகன் மாதம் ஒரு லட்சம் சம்பளம் வாங்கும் அளவிற்கு உயர்ந்திருக்கிறாராம். அவருக்கு திருமண ஏற்பாடுகளும் செய்து கொண்டிருக்கும் நேரத்தில் தான் மாரிமுத்து எதிர்பாராத விதமாக உயிரிழந்து விட்டார். ஆனால் தனது மகனை சினிமாவுக்கு வரவேண்டாம் என்று சொன்னதற்கு மாரிமுத்து ஒரு காரணம் வைத்து இருக்கிறார்.

ஆரம்பத்தில் மாரிமுத்து சினிமாவில் நிறைய கஷ்டப்பட்டு இருந்திருக்கிறார். தனது குடும்பத்திற்காக நேரமும் அவரால் செலவிட முடியாமல் போய்விட்டது. ஆகையால் தன்னைப்போல் தனது மகனும் சினிமாவில் கஷ்டப்படக் கூடாது நன்கு படித்து நல்ல வேலையில் அமர வேண்டும் என்பதற்காகத்தான் மாரிமுத்து இவ்வாறு நல்வழிப்படுத்தி இருக்கிறார்.

Also Read : எதிர்நீச்சல் குணசேகரன் கேரக்டருக்கு பொருத்தமான 5 வில்லன்கள்.. ஈடு கொடுக்க முடியாத மாரிமுத்துவின் இடம்

- Advertisement -

Trending News