புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

துக்கம் தொண்டை அடைக்க செய்த 5 மாரடைப்பு மரணங்கள்.. விவேக் முதல் மாரிமுத்து வரை

5 Actors Died Heart Attack: சமீபகாலமாக பிரபலங்களின் திடீர் மரணச் செய்தி ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது. அதுவும் குறிப்பாக மாரடைப்பால் சில மரணங்கள் துக்கம் தொண்டையை அடைக்க செய்கிறது. அந்த வகையில் சற்றும் எதிர்பாராமல் நிகழ்ந்த ஐந்து மாரடைப்பு மரணங்களை இந்த பதிவில் கனத்த இதயத்துடன் பார்க்கலாம்.

விவேக் : சின்ன கலைவாணர் விவேக் எண்ணற்ற படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து நம்மை சிரிக்க வைத்திருக்கிறார். இவருடைய மரணம் யாரும் எதிர்பார்க்காத ஓன்றாகத் தான் அமைந்தது. அதாவது கடந்த 2021 ஆம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதித்த போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Also Read : தன்னைத் தவிர யாரையும் காமெடியனாக நினைக்காத கவுண்டமணி.. விவேக் கூட்டணியில் கலக்கிய 7 படங்கள்

கேவி ஆனந்த் : அயன், காப்பான் போன்ற சூர்யாவின் படங்களை இயக்கி பிரபலம் அடைந்தவர் தான் கேவி ஆனந்த். இவர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு அதன் பிறகு குணம் பெற்ற நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அப்போது அவருக்கு 51 வயது தான். இந்த செய்தி அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

சேதுராமன் : கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தில் சந்தானத்தின் நண்பராக நடித்தவர் தான் வி சேதுராமன். இவர் நடிகர் மட்டுமல்லாமல் மருத்துவராகவும் செயல்பட்டுக் கொண்டிருந்தார். இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு தன்னுடைய 34வது வயதில் திடீர் மாரடைப்பு காரணமாக சேதுராமன் உயிரிழந்தார்.

Also Read : எதிர்நீச்சல் குணசேகரன் கேரக்டருக்கு பொருத்தமான 5 வில்லன்கள்.. ஈடு கொடுக்க முடியாத மாரிமுத்துவின் இடம்

மயில்சாமி : பெரும்பாலும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் மயில்சாமி. இவர் சிவராத்திரி அன்று சிவன் கோயிலில் நடந்த பூஜையில் கலந்து கொண்டு வீடு திரும்பிய போது மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 57 வயதில் இவரை மாரடைப்பு ஆட்கொண்டது.

மாரிமுத்து : இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பல பரிமாணங்களை கொண்டிருந்தாலும் சின்னத்திரை தொடரான எதிர்நீச்சல் சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மாரிமுத்து. ஆதி குணசேகரனாக கலக்கி வந்த இவர் 57 வயதில் இன்று திடீர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

Also Read : முதல் நாள் சூட்டிங்கில் நடிக்க முடியாமல் பிரிந்த மாரிமுத்துவின் உயிர்.. 200க்கும் மேல் படத்தில் நடித்த ஹீரோவுக்கு வில்லனாம்

- Advertisement -

Trending News