ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

எஸ்ஜே சூர்யா மாதிரி இந்த 7 இயக்குனர்களிடம் வேலை பார்த்த மாரிமுத்து.. படம் எடுத்து வாழ்க்கை தொலைத்த கொடுமை

Director and Actor Marimuthu: சீரியலில் நடிக்க கூடியவர் இந்த அளவுக்கு பிரபலமாக முடியுமா என்பதை ஆச்சரியப்படுத்தும் வகையில் எதிர்நீச்சல் சீரியலில் வில்லனாக நடிக்கும் குணசேகரன் பட்டைய கிளப்பிக் கொண்டு வருகிறவர் இயக்குனர் மாரிமுத்து. தற்போது எங்கு திரும்பினாலும் இவருடைய பேட்டி மற்றும் பேச்சுக்கள் தான் எல்லா பக்கமும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இவர் சினிமாவில் பயணித்து வந்த பாதைகளை ஒரு தொகுப்பாக பார்க்கலாம்.

அதாவது சினிமாவில் எப்படியாவது இயக்குனராக வேண்டும் என்ற ஆசையில் சென்னைக்கு வந்தார். அப்பொழுது ஹோட்டலில் பணியாளராக பணிபுரிந்த இவர், பாடல் ஆசிரியர் வைரமுத்து அவர்களுடன் பழகும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இந்த வாய்ப்பை வைத்து நடிகர் ராஜ்கிரனுடன் அரண்மனைக்கிளி மற்றும் எல்லாமே என் ராசா தான் போன்ற படங்களுக்கு உதவி இயக்குனராக பணி புரிந்திருக்கிறார்.

Also read: படப்பிடிப்பு தளத்தில் நடிகருடன் குணசேகரனுக்கு ஏற்பட்ட வாக்குவாதம்.. திடீரென விலகிய மாரிமுத்து

இதனால் பல இயக்குனர்கள் கண்ணுக்கு மாரிமுத்து நல்ல பரிச்சியமாக தென்பட ஆரம்பித்தார். அதன் பிறகு இயக்குனர் மணிரத்தினிடம் கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக பணி புரிந்திருக்கிறார். அதன் விளைவாக மணிரத்தினம் இயக்கிய இருவர் மற்றும் பம்பாய் படங்களுக்கு உதவி இயக்குனராக வேலை பார்த்திருக்கிறார்.இதனைத் தொடர்ந்து இவர் குருவாக பார்ப்பது இயக்குனர் வசந்த்.

இவருடன் எப்படியாவது பணியாற்ற வேண்டும் என்று கடிதத்தின் மூலம் இவருடைய அனுபவங்களை எழுத்தாளராக பதிவிட்டு அவருக்கு அனுப்பி இருக்கிறார். அதன்பின் வசந்த் அவர்கள் இவரை கூப்பிட்டு கேளடி கண்மணி படத்தில் பல வாய்ப்புகளை கொடுத்திருக்கிறார். அடுத்ததாக இயக்குனர் சீமான், எஸ் ஜே சூர்யா, மற்றும் ராஜீவ் மேனன் இவர்களிடமும் உதவி இயக்குனராக பணிபுரிந்து இருக்கிறார்.

Also read: விஜய்யுடன் நடிக்க மறுத்த 3 ஹீரோக்கள்.. உண்மையை போட்டு உடைத்த எதிர்நீச்சல் குணசேகரன்

மேலும் சிம்பு நடிப்பில் வெளிவந்த மன்மதன் படத்திலும் வேலை பார்த்திருக்கிறார். இப்படி தொடர்ந்து ஏழு இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக வேலை பார்த்த பின்பு இயக்குனராக மாறிவிடலாம் என்று ஆசைப்பட்டார். அதன் விளைவாக இவர் இயக்கிய படங்கள் கண்ணும் கண்ணும் மற்றும் புலிவால். இந்த இரண்டு படங்களிலும் பிரசன்னாவை நடிக்க வைத்திருக்கிறார். ஆனால் இந்த படங்கள் எதிர்பார்த்து அளவிற்கு மக்களிடம் போய் சேரவில்லை.

இதனால் இவருடைய வாழ்க்கையே தொலைந்துவிட்டது என்று சொல்லும் அளவிற்கு பல கஷ்டங்களை பார்த்திருக்கிறார். ஆனால் இவரால் சினிமாவை விட்டு போக முடியாமல் ரொம்பவே அவஸ்தை பட்டு வந்திருக்கிறார். ஒரு கட்டத்திற்கு பிறகு இயக்குனராக வளர முடியவில்லை என்று நினைத்து நடிகராக பல படங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார். தற்போது இவருடைய நடிப்பை மிஞ்சும் அளவிற்க்கு யாராவது ஈடாகுவார்களா என்று சொல்வதற்கு ஏற்ப சீரியலில் கிங்காக செயல்பட்டு வருகிறார்.

Also read: எதிர்நீச்சல் சீரியலுக்குப் பின் கொடிகட்டி பறக்கும் குணசேகரன்.. 3 டாப் ஹீரோக்களுடன் போட்ட தரமான கூட்டணி

- Advertisement -

Trending News