வியாழக்கிழமை, பிப்ரவரி 13, 2025

200 கோடி வசூலை அள்ளிய மஞ்சுமல் பாய்ஸ்.. ஓடிடி ரிலீஸால் பரிதவிக்கும் தியேட்டர் ஓனர்ஸ்

Manjummel Boys : சமீபகாலமாக மலையாள சினிமாவில் வெளியாகும் படங்கள் தமிழ் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான படம் தான் மஞ்சுமல் பாய்ஸ்.

சிதம்பரம் எஸ் பொதுவாள் இயக்கத்தில் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து மஞ்சுமல் பாய்ஸ் படம் எடுக்கப்பட்டிருந்தது. கேரளாவைச் சேர்ந்த 11 நண்பர்கள் ஒன்றாக கொடைக்கானல் செல்கின்றனர்.

அதில் ஒருவர் எதிர்பாராத விதமாக பள்ளத்தில் தவறி விழுந்து விடுகிறார். அவரை மற்ற நண்பர்கள் சேர்ந்து எவ்வாறு காப்பாற்றுகிறார்கள் என்பதுதான் மஞ்சுமல் பாய்ஸ். இந்தப் படத்திற்கு கேரளாவை தாண்டி எல்லா மொழிகளிலும் வரவேற்பு கிடைக்க தொடங்கியது.

ஓடிடியில் வெளியான மஞ்சுமல் பாஸ்

ஆகையால் மற்ற மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. அதன்படி முதல் முறையாக மலையாள சினிமாவில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை இப்படம் பெற்றது. கிட்டத்தட்ட 200 கோடியை தாண்டி வசூல் செய்திருக்கிறது மஞ்சுமல் பாய்ஸ்.

இதனால் தியேட்டர் உரிமையாளர்களுக்கு நல்ல லாபத்தை படம் பெற்றுக் கொடுத்திருந்தது. இந்நிலையில் ரசிகர்கள் எப்போது ஓடிடியில் மஞ்சுமல் பாய்ஸ் வெளியாகும் என காத்துக் கொண்டிருந்தனர்.

அதன்படி ஏப்ரல் 5 ஆம் தேதியான இன்று டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் மஞ்சுமல் பாய்ஸ் வெளியாகி இருக்கிறது. இத்தனை நாள் தியேட்டரில் நல்ல வசூலை பார்த்து வந்த தியேட்டர் ஓனர்ஸ்க்கு இது அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது

Trending News