கமலை ஜாதியை வைத்து பகிரங்கமாக திட்டிய மணிவண்ணன்.. ஜாக்கிரதையா இருக்கணும், அதிர்ந்த போன மேடை

சினிமாவை வேறொரு கண்ணோட்டத்துடன் பார்ப்பவர் உலகநாயகன் கமலஹாசன். இவர் கடவுளே இல்லை என்று நாத்திகம் பேசும் கூட்டத்தை சேர்ந்தவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனால் கமலை ஜாதி வைத்து பகிரங்கமாக திட்டி இருக்கிறார் பிரபல இயக்குனரும் நடிகருமான மணிவண்ணன்.

அதுமட்டுமின்றி கமலிடம் ஜாக்கிரதையாக இருந்து கொள்ள வேண்டும். அவர் ஒரு மிகப்பெரிய விஷ ஊசி என்று மேடையில் பேசி அதிர்ச்சியடைய வைத்திருக்கிறார். கமல் ஒரு நல்ல ஐயங்கார். அதனால் தான் அவருடைய படங்கள் ஆன தசாவதாரம், விஸ்வரூபம் போன்ற படங்களில் எல்லாம் இதை வெளிப்படுத்தி இருப்பார்.

Also Read: கமலுடன் கூட்டணி சேர்ந்த அஜித்தின் ஆஸ்தான இயக்குனர்.. கைமாறிய பல கோடி பணம்

மேலும் அவர் தசாவதாரம் படத்தில் ஒரு லாரியில் தப்பித்து போவது போல் காட்டி இருப்பார். அதில் ராமர் துணை, ஸ்ரீராமஜெயம் ஒன்று எழுதி இருக்கும். அப்படிப்பட்டவர்களிடமெல்லாம் ரொம்ப வில்லங்கமானவர்கள் விச ஊசிகள். அவர்களிடமிருந்து ரொம்பவே ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

அத்துடன் கமலஹாசனின் படங்களில் ஹாலிவுட் தொழில்நுட்பங்களை எல்லாம் பயன்படுத்துவது சரிதான். ஆனால் ஹாலிவுட் அரசியலை நம்மிடம் திணிக்க கூடாது. அந்த வேலையை தான் கமல்ஹாசன் செய்து கொண்டிருக்கிறார். மேலும் அமெரிக்காவிற்கு கமல் ஒத்து ஊதிக் கொண்டிருப்பதாகவும் குற்றம் சாட்டுகிறார்.

Also Read: கமல் போலவே டான்சில் பட்டையை கிளப்பிய 2 நடிகர்கள்.. வாய்ப்புகள் இல்லாததால் ஸ்கூல் ஆரம்பித்த நிலைமை

ஏனென்றால்படாத பாடுபட்டு பிரிட்டிஷ்கரர்களை இந்தியாவை விட்டு விரட்டி அடித்தோம். ஆனால் இப்போது கமலஹாசன் பிரிட்டிஷ் மகாராணியை மறுபடியும் அழைத்து வந்து, அவரை வைத்து நிகழ்ச்சியையும் நடத்துகிறார். மறுபடியும் அவர்களுக்கு கைகட்டி கொண்டு, இருக்க வைக்க பார்க்கிறாரா என்று கேள்வி எழுப்புகிறார்.

மேலும் ஹாலிவுட்டில் செட்டிலாக வேண்டும் என்ற கமலின் கனவுக்காக கோலிவுட்டை பகடைக்காயாக உருட்டுகிறார் என்று மணிவண்ணன் உலக நாயகன் கமலஹாசனை குறித்து வெளிப்படையாகப் பேசி சர்ச்சையை கிளப்பிய பேட்டி ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது.

Also Read: ஹாலிவுட்டுக்கு டஃப் கொடுத்த 6 தமிழ் படங்கள்.. அறிவியல் சார்ந்த கதைகளை வைத்து வெற்றி கண்ட இயக்குனர்கள்

Next Story

- Advertisement -