ரொமான்ஸில் புகுந்த மகேஷ் ஆனந்தி.. தவிக்கும் அன்பு, யார் காதல் கை கூட போகுது?

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிங்கப்பெண்ணே சீரியல் தற்போது டிஆர்பி-யில் நம்பர் ஒன் இடத்தை பிடித்திருக்கிறது. அதற்கு காரணம் இதில் நடிப்பவர்களின் நடிப்பு அனைவரையும் ஈர்க்கும் வகையில் எதார்த்தமாக இருப்பதுதான். ஆனந்தியின் கண்ணுக்கு தவறாகவும் பொருக்கித்தனமாகவும் அன்பு தெரிகிறார். ஆனால் நிஜ ஹீரோவாகவும், கஷ்டப்படும் பெண்களுக்கு உதவி கரம் நீட்டும் அன்பு.

இருந்தாலும் ஆனந்தி கண்மூடித்தனமாக அன்பு-வை தவறாக நினைத்துக் கொண்டு வெறுத்து வருகிறார். இதற்கிடையில் அன்பு-விற்கு ஆனந்தி மீது காதலையும் தாண்டி சொல்ல முடியாத அளவிற்கு ஒரு உணர்வு ஏற்பட்டு விடுகிறது. அதனால் ஆனந்தி எந்த விதத்திலும் கவலையும் கஷ்டமும் படக்கூடாது என்று ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து அவர் செய்கிறார்.

அந்த வகையில் கார்மெண்ட்ஸ்சில் இருப்பவர்கள் ஆனந்திடம் அன்பு உண்மையிலே நல்லவர் என்றும் சொல்லியும் அதை ஏற்க மறுக்கிறார். அப்பொழுது மகேஷ் உள்ளே நுழைந்து ஆனந்தி கண்ணுக்கு ஹீரோவாக ஜொலிக்கிறார். இவருடைய கேரக்டரிலும் எந்த குறையுமே சொல்ல முடியாத அளவிற்கு நல்லவராக இருக்கிறார். அத்துடன் இவருக்கும் ஆனந்தி மீது ஒரு அபிப்பிராயம் இருக்கிறது.

Also read: ஈஸ்வரிக்கு பக்க பலமாக இருக்கும் ஜீவானந்தம்.. குணசேகரன் மூஞ்சில் கரியை பூச சூழ்ச்சியில் இறங்கிய தோழர்

அதனால் ஆனந்திக்கு நல்லது மட்டுமே நடக்க வேண்டும் என்று மகேஷ் ரொம்பவே சப்போர்ட் பண்ணுகிறார். ஏற்கனவே மாயாவிற்கு ஆனந்தி கண்டால் பிடிக்காது. இதுல வேற மகேஷ் கல்யாணம் பண்ணி செட்டில் ஆக வேண்டும் என்று நினைக்கும் மாயாவிற்கு எதிர் மாறாக மகேஷ் ஆனந்தி மீது அக்கறை காட்டுவது எதில போயி முடியப் போகிறதோ.

இதனைத் தொடர்ந்து கார்மெண்ட்ஸ்சில் இருக்கும் கண்ணாயிரம் வேற ஆனந்திக்கு எப்படியாவது கெட்ட பெயரை உண்டாக்க வேண்டும் என்று பல சூழ்ச்சிகளை செய்து வருகிறார். இதிலிருந்து ஒவ்வொரு முறையும் தப்பித்து ஆனந்தி மகேஷ் மனதிற்குள் புகுந்து விடுகிறார். ஆனால் இவருக்கு பின்னணியில் இருந்து பக்கபலமாக சப்போர்ட் செய்வது அன்பு தான்.

ஆக மொத்தத்தில் அன்பு மற்றும் மகேஷ் காதலுக்கு நடுவில் ஆனந்தி மாட்டிக்கொண்டு முழிக்கிறார். இதில் இரண்டு பேரும் காதலுமே உண்மையாக இருக்கிறது. அந்த வகையில் யாருடைய காதல் கை கோர்க்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Also read: எதிர்நீச்சல் பிரபலங்கள் ஒரு எபிசோடுக்கு வாங்கும் சம்பள விவரம்.. சீன் போடும் ஜனனிக்கு இவ்வளவு சம்பளமா?