ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 10, 2024

எதிர்நீச்சல் பிரபலங்கள் ஒரு எபிசோடுக்கு வாங்கும் சம்பள விவரம்.. சீன் போடும் ஜனனிக்கு இவ்வளவு சம்பளமா?

Ethirneechal Serial: சின்னத்திரை தொலைக்காட்சியில் பல வருடங்களுக்குப் பிறகு சன் டிவி சீரியலுக்கு மவுசு ஏறியது என்றால் அது எதிர்நீச்சல் சீரியலுக்குத்தான். கூட்டுக் குடும்பமாக இருக்கும் இடத்தில் ஆணாதிக்கம் என்பது எவ்வளவு அதிகமாக இருக்கிறது, அதிலிருந்து பெண்கள் எப்படி மீள வேண்டும் என்ற விழிப்புணர்வு போன்றவற்றை கதை களமாக கொண்டு இந்த சீரியல் போய்க்கொண்டு இருக்கிறது.

எதிர்நீச்சல் சீரியலை பெண்கள் மட்டும் இல்லாமல் ஆண்கள், இளைஞர்கள் பாக்க ஆரம்பித்தது இதற்கு முன் ஆதி குணசேகரன் கேரக்டரில் நடித்த மாரிமுத்துவுக்காகத்தான். அவர் இறந்த பிறகு இந்த சீரியலுக்கு அந்த அளவுக்கு பெயர் கிடைக்கவில்லை என்றாலும், வாரவாரம் ஏதாவது ஒரு ட்விஸ்ட்டை வைத்து பரபரப்பை கிளப்பியே ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளம்

சமீபத்தில் இந்த சீரியலில் நடிக்கும் முக்கிய கேரக்டர்கள் ஒரு நாளைக்கு வாங்கும் சம்பள விவரம் வெளியாகி இருக்கிறது. நந்தினி கேரக்டரில் நடிக்கும் ஹரிப்பிரியா ஏற்கனவே நிறைய சீரியல்களில் நடித்த சீனியர் ஆர்டிஸ்ட். அதேபோன்று ஈஸ்வரி கேரக்டரில் நடிக்கும் கனிகா வெள்ளி திரையிலிருந்து சின்னத்திரைக்கு வந்திருக்கிறார். இவர்கள் இருவருக்குமே ஒரு நாளைக்கு 12000 சம்பளமாக கொடுக்கப்படுகிறது.

Also Read:குணசேகரனின் கொட்டத்தை அடக்க ஈஸ்வரி எடுக்க போகும் முடிவு.. யார் கொடுத்த தைரியம் தெரியுமா?

சின்னத்திரை தொகுப்பாளனியாக பல வருடங்கள் மக்கள் மனதில் நிலைத்து நிற்பவர் தான் பிரியதர்ஷினி. வெள்ளித்திரையிலும் ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார். இவருக்கு ஒரு நாளைக்கு பத்தாயிரம் சம்பளமாக கொடுக்கப்படுகிறது. அதேபோன்று இந்த கதையின் ஹீரோவாக நடிக்கும் சக்தியும் ஒரு நாளைக்கு 10,000 சம்பளமாக வாங்குகிறார்.

மாரிமுத்து அளவுக்கு எதிர்நீச்சல் சீரியலில் பெயர் வாங்கியவர் கரிகாலன் கேரக்டரில் நடிப்பவர்தான். கள்ளம் கபடம் இல்லாத முகம், பேசும் வார்த்தைகள் அத்தனையுமே ஏழரை என சீரியல் முழுக்க சிரிக்க வைத்துக் கொண்டிருக்கும் இவருக்கு ஒரு நாளைக்கு 10 ஆயிரம் சம்பளமாக கொடுக்கப்படுகிறது. எதிர்நீச்சல் சீரியலில் இவர் ஒரு மிகப்பெரிய பக்கபலமாக இருந்து வருகிறார்.

எதிர்நீச்சல் சீரியலில் முதலில் முக்கியமான கேரக்டராக காட்டப்பட்டது ஜனனி கேரக்டரில் நடிக்கும் மதுமிதாவை தான். மதுமிதா வந்து தான் அந்த வீட்டின் ஆணாதிக்கத்தை அடக்கப் போவது போல் காட்டப்பட்டது. ஆனால் இன்று வரை அவர் அந்த சீரியலில் பெருசாக எதுவும் செய்யவில்லை. அவருக்கு ஒரு நாளைக்கு சம்பளம் மட்டும் 15 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.

Also Read:எதிர்நீச்சல் குணசேகரன் கதாபாத்திரத்திற்கு வாங்கும் சம்பளம்.. தெனாவட்டு காட்டும் வேல ராமமூர்த்தி

- Advertisement -spot_img

Trending News