ஈஸ்வரிக்கு பக்க பலமாக இருக்கும் ஜீவானந்தம்.. குணசேகரன் மூஞ்சில் கரியை பூச சூழ்ச்சியில் இறங்கிய தோழர்

Ethirneechal: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் சாருபாலாவை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக தனக்குத்தானே சூனியம் வைத்துக் கொண்டார் குணசேகரன். ஈஸ்வரியை பகடைகாயாக பயன்படுத்த நினைத்த இவருக்கே கடைசியில் ஆப்பாக முடிந்து விட்டது. அதாவது சாருபாலா எலக்ஷனில் நிற்பதை வாபஸ் வாங்கி விட்டார் என்று தெரிந்ததும் ஈஸ்வரியை வாபஸ் வாங்க சொன்னார்.

ஆனால் ஜீவானந்தம், ஈஸ்வரிக்கு போன் பண்ணி உங்களுக்கு கிடைத்த வாய்ப்பை இப்பொழுது நழுவ விட்டு விட்டால் மறுபடியும் உங்களால் எழுந்திருக்கவே முடியாது. அதனால் எலக்ஷனில் நிற்க வேண்டும் என்று சொல்லிவிட்டார். இதை யோசித்த பிறகு ஈஸ்வரியும் என்னால் வாபஸ் வாங்க முடியாது என்று குணசேகரனிடம் மறுத்துவிட்டார். அதனால் குணசேகரன் ஈஸ்வரியை தரதரவென்று இழுத்து கையெழுத்து போட வைத்து விடலாம் என்று நினைத்தார்.

இதில் தான் ஜீவானந்தத்தின் சூழ்ச்சி இருக்கிறது. அதாவது குணசேகரன் வீட்டில் இதே மாதிரி ஏதாவது ஒரு விஷயம் நடக்கும் என்பதற்காக பத்திரிகையாளரிடம் ஃபோன் பண்ணி நீங்கள் அந்த இடத்திற்கு போய் இந்த மாதிரி ஒரு செட்டப்பை அமைத்து விடுங்கள் என்று கூறியிருக்கிறார். அதன்படியே எதிர்பாராத விதமாக குணசேகரன் வீட்டில் பத்திரிக்கையாளர்கள் புகுந்ததும் ஈஸ்வரியை எதுவுமே சொல்ல முடியாமல் வாய் அடைத்து போய்விட்டார்.

Also read: எதிர்நீச்சல் பிரபலங்கள் ஒரு எபிசோடுக்கு வாங்கும் சம்பள விவரம்.. சீன் போடும் ஜனனிக்கு இவ்வளவு சம்பளமா?

இதனை தொடர்ந்து ஒரே வீட்டில் எதிரும் புதிருமாக இரு வேட்பாளர்கள் மோதிக் கொள்ளப் போகிறார்கள் என்று சொல்லிய நிலையில் ஈஸ்வரி மற்றும் குணசேகரன் எலக்ஷனில் நிற்கப் போகிறார்கள். இதில் எப்படியும் நான் தான் ஜெயிப்பேன் என்ற கர்வத்துடன் குணசேகரன் இருக்கிறார். ஆனால் இங்கேதான் ஒரு ட்விஸ்ட் இருக்கிறது.

அதாவது இந்த எலக்சனை வைத்து தான் குணசேகரன் மூஞ்சியில் கரியை பூச வேண்டும் என்று வீட்டில் இருக்கும் பெண்கள் அனைவரும் முயற்சி எடுக்கிறார்கள். இவருக்கு பின்னால் எஸ் கே ஆர் மற்றும் ஜீவானந்தம் பக்க பலமாக இருந்து உதவப் போகிறார்கள். அந்த வகையில் ஈஸ்வரி முன்னாடி குணசேகரன் தோற்று நிற்கப் போகிறார்.

இதுதான் இவருக்கு கிடைத்த முதல் தோல்வியாக இருக்கப் போகிறது. அத்துடன் ஈஸ்வரி இந்த ஒரு வாய்ப்பை பயன்படுத்தி அடுத்தடுத்து முன்னேற்றத்திற்கு காலடி எடுத்து வைக்கப் போகிறார். இனி குணசேகரன் நினைச்சாலும் ஒன்னும் பண்ண முடியாது என்பதற்கு ஏற்ப ஜெயித்துக் காட்டப் போகிறார். இதற்கிடையில் சாருபாலா, அப்பத்தாவின் இறப்பிற்கு காரணம் குணசேகரன் தான் என்கிற உண்மையையும் நிரூபித்துக் காட்டுவார்.

Also read: எதிர்நீச்சல் குணசேகரன் கதாபாத்திரத்திற்கு வாங்கும் சம்பளம்.. தெனாவட்டு காட்டும் வேல ராமமூர்த்தி