சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

ரிலீசுக்கு முன்பே பல நூறு கோடி கல்லா கட்டிய லியோ.. RRR வசூலை முறியடிக்க லோகேஷ் போட்ட திட்டம்

Leo Pre-Business: பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீசுக்கு முன்பே பிரீ பிசினஸ் விற்பனையில் பெரிய தொகையை லாபமாக பார்த்துவிடும். அந்த வகையில் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் இப்போது பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் லியோ படம் ரிலீசுக்கு முன்பே பல நூறு கோடி கல்லாகட்டி இருக்கிறது. அதிலும் பல சாதனைகளையும் இந்த படம் நிகழ்த்தி இருக்கிறது.

அதாவது இதுவரை தமிழ் சினிமாவில் ஒரு படம் வெளியிடுவதற்கு முன்பே அதிக விற்பனை செய்த படம் என்ற பெருமையை லியோ பெற்றிருக்கிறது. அதன்படி கிட்டத்தட்ட 422 கோடி சம்பாதித்த முதல் திரைப்படம் லியோவாக இருக்கிறது. அதாவது இப்படம் திரையரங்குகள் அல்லாத உரிமைகள் மட்டும் 246 கோடி பெற்றிருக்கிறது.

Also Read : லியோவுக்கும், ரெட் ஜெயண்ட்டுக்கும் சம்பந்தமில்ல.. உண்மையை உரைக்கிற மாதிரி சொல்லிய தயாரிப்பாளர்

பெரிய படங்கள் வெளியாவதற்கு முன்பே ஓடிடி நிறுவனங்கள் பெரிய தொகை கொடுத்து படங்களை வாங்கி விடுகின்றனர். அந்த வகையில் ஜெயிலர் படத்தை அமேசான் பிரைம் கைப்பற்றி இருந்தது. அதேபோல் இப்போது லியோ படத்தை நெட்பிளிக்ஸ் ஸ்ட்ரீமிங் உரிமையை பெற்றிருக்கிறது. இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமான தொகையை கொடுத்து லியோ படத்தை வாங்கியுள்ளது.

மேலும் இங்கிலாந்தில் லியோ படத்தின் டிக்கெட் விற்பனை தொடங்கிய 24 மணி நேரத்திற்குள் ஆயிரம் டிக்கெட்டுகளை விற்று விட்டதாம். அதாவது ரிலீசுக்கு முன்பே ஒரு நாளுக்குள் ஆயிரம் டிக்கெட்டுகள் விற்ற முதல் படம் என்ற சாதனையை இங்கிலாந்தில் லியோ படம் பெற்றிருக்கிறது. மேலும் அங்கு முன்பதிவுகள் மட்டும் கிட்டத்தட்ட 23,098 டிக்கெட்டுகள் ஆகும்.

Also Read : 5 ஹீரோக்களின் வாழ்க்கையை தூக்கி நிறுத்திய லோகேஷ்.. அர்ஜுன் தாஸ்க்கு கொடுக்கப்பட்ட அதிக வாய்ப்பு

மேலும் IMAX திரையரங்குகளில் லியோ படத்தை வெளியிட லோகேஷ் திட்டம் போட்டிருக்கிறார். அந்த வகையில் கோவையில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ஐஎம்எக்ஸ் திரையரங்குகளில் லியோ படம் வெளியாக இருக்கிறது. அதேபோல் அமெரிக்காவிலும் ஐஎம்எக்ஸ் வடிவத்தில் படத்தை வெளியிட உள்ளனர்.

இதற்கு முன்னதாக அமெரிக்காவில் 80 ஐஎம்எக்ஸ் திரையில் ஆர்ஆர்ஆர் படம் வெளியாகி இருந்தது. இப்போது அந்த சாதனையை முறியடிக்கும் நோக்கில் லோகேஷ் லியோ படத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் இந்த படம் ஆயிரம் கோடி வசூல் செய்யும் என்பதில் படக்குழு உறுதியாக இருக்கிறார்கள்.

Also Read : லோகேஷ்க்கு பின் பிரம்மாண்ட கூட்டணியில் தலைவர்-172.. ஹைப் குறையாம தொக்கா தூக்கிய ரஜினி

- Advertisement -

Trending News