ஐஸ்வர்யா போல தனுசுக்கு பெண் பார்த்து இருக்கும் செல்வராகவன்.. புது ஜோடி சூப்பர்

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் சில மாதங்களுக்குப் முன்பு பிரிய போவதாக அறிவித்தனர். இவர்களை இணைப்பதற்காக பெற்றோர்கள், நண்பர்கள், ரசிகர்கள் என பலரும் முயற்சி செய்தும் தோல்வியில் முடிந்தது. ஆனால் சமீபத்தில் தனது மகனுக்காக அவரது பள்ளிக்கு ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் சென்றிருந்தனர்.

அங்கு இவர்கள் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மீண்டும் இவர்கள் இணைந்து விட்டதாக கூறி வந்தனர். ஆனால் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவருமே தங்கள் எடுத்த முடிவில் உறுதியாக உள்ளனர். அதுமட்டுமின்றி தங்களது கடமையையும் விட்டுக் கொடுக்காமல் உள்ளனர்.

Also Read :தனுஷ் சொன்னது அப்பட்டமான பொய்.. பல வருட ரகசியத்தை போட்டுடைத்த பா. ரஞ்சித்

இந்நிலையில் அச்சு அசல் ஐஸ்வர்யா போலவே தனுசுக்கு ஒரு பெண்ணை பார்த்துள்ளார் செல்வராகவன். மனைவியைப் பிரிந்த வருத்தத்தில் இருக்கும் தனுஷ் தற்போது பட வேலைகளில் பிஸியாக உள்ளார். சமீபத்தில் தனுஷின் திருச்சிற்றம்பலம் படம் வெளியாகி வசூல் வேட்டையாடி வருகிறது.

இதைத்தொடர்ந்து தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படத்தில் தனுஷ் நடித்துள்ளார். இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இதில் ஒரு தனுசுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை எல்லி அவ்ராம் நடித்துள்ளார். இவர்கள் இருவரும் ஜோடியாக உள்ள போஸ்டர் அண்மையில் வெளியாகி உள்ளது.

Also Read :யூடியூபில் அதிக வியூஸ் பெற்ற 5 பாடல்கள்.. யாராலும் முறியடிக்க முடியாத சாதனையில் தனுஷ்

எல்லி அவ்ராம் பார்ப்பதற்கு அப்படியே தனுஷின் முதல் மனைவி ஐஸ்வர்யா போல இருக்கிறார். இந்த போஸ்டரை பார்த்த ரசிகர்கள் தம்பிக்காக செல்வராகவன் தனுஷின் மனைவி சாயலில் உள்ள ஒரு பெண்ணை பார்த்துள்ளார் என விமர்சித்து வருகிறார்கள். சிலர் இந்த புது ஜோடி சூப்பர் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

naane-varuvaen

மேலும் நானே வருவேன் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இந்துஜா ரவிச்சந்திரன், யோகி பாபு, பிரபு ஆகியோர் நானே வருவேன் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் ட்ரெய்லர் வருகின்ற 11ஆம் தேதி வெளியாக உள்ளது.

Also Read :கோடிகளை இறைக்கும் திருச்சிற்றம்பலம்.. வசூல் சக்கரவர்த்தியாக தனுஷ்

Next Story

- Advertisement -