புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

மகள் மார்க்கெட்ல விலை போகலனு தெரிந்து தூக்கி விடும் அப்பா.. இயக்குனர் அவதாரம் எடுக்கும் லியோ பட வில்லன்

Leo Villan: இப்போது கோலிவுட் சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் படம் தான் லியோ. லோகேஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் விஜய் கதாநாயகனாக நடித்துள்ள நிலையில் வில்லனாக பல பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள். இயக்குனர், ஹீரோ, வில்லன் என பலரை வலை வீசி லியோ படத்தில் கொண்டு வந்துள்ளார் லோகேஷ்.

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் முக்கிய வில்லன் என்ற கூறப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக இயக்குனர்களான மிஸ்கின், கௌதம் மேனன் ஆகியோரும் வில்லனாக நடித்திருக்கிறார்கள். லோகேஷின் இன்ஸ்பிரேஷன் ஆன மன்சூர் அலிகான் லியோ படத்தில் இணைந்திருக்கிறார். அடுத்ததாக அர்ஜுன் விஜய் உடன் வில்லனாக முதன்முறை மோத இருக்கிறார்.

Also Read : லியோ கிளைமாக்ஸ்ஸில் அதிரடியான சஸ்பென்ஸ் வைக்கும் லோகேஷ்.. 1000 கோடி வசூலை பார்க்காமல் விடமாட்டேன்

இந்நிலையில் அர்ஜுன் இப்போது புது அவதாரம் எடுத்திருக்கிறார். தனது ஸ்ரீராம் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் என்ற பட தயாரிப்பு நிறுவனம் மூலம் தன்னுடைய 15 வது படத்தை தயாரிக்க இருக்கிறார். இதில் சிறப்பம்சம் என்னவென்றால் இந்த படத்தின் கதை, வசனம் எல்லாமே அர்ஜுன் எழுதி இருக்கிறாராம்.

அதோடு மட்டுமல்லாமல் படத்தையும் அவரே இயக்க உள்ளார் என்ற செய்தியை வெளியாகி இருக்கிறது. அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா கதாநாயகியாக அறிமுகமான நிலையில் அவருடைய படங்கள் வெற்றி பெறவில்லை. தமிழ் சினிமா மார்க்கெட்டில் தனது மகள் விலை போகவில்லை என்பதற்காக தூக்கி விட அர்ஜுன் இறங்கி இருக்கிறார்.

Also Read : அதிரடியான ட்விஸ்ட் வைத்த லியோ லோகேஷ்.. தள்ளிப்போகும் தளபதி-68, பதட்டத்தில் வெங்கட் பிரபு

அதாவது அர்ஜுன் தயாரிக்க உள்ள படத்தில் ஐஸ்வர்யா அர்ஜுன் கதாநாயகியாக நடிக்க உள்ள நிலையில் கன்னட நடிகர் நிரஞ்சன் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். மேலும் இப்படத்தில் ஜெயராம், பிரகாஷ்ராஜ், சத்யராஜ் போன்ற முன்னணி பிரபலங்கள் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

சமீபத்தில் காமெடி நடிகர் தம்பி ராமையா மகன் உமாபதிக்கும் ஐஸ்வர்யாவுக்கும் விரைவில் திருமணம் என்ற செய்தி வெளியானது. ஆனால் அதற்கு முன்னதாகவே ஹீரோயின் ஆக தனது மகளை தமிழ் சினிமாவில் கொண்டாட வேண்டும் என்பதற்காக அர்ஜூன் இந்த படத்தை எடுக்க திட்டமிட்டு இருக்கிறார். அதுவும் இந்த படம் ஐந்து மொழிகளில் உருவாக இருக்கிறதாம்.

Also Read : கிழக்குச் சீமையிலே விஜயகுமாரை மிஞ்சிய அல்லு அர்ஜுன்.. மாமன் சீராக இலட்சக்கணக்கில் கொட்டிக் கொடுத்த ஹீரோ

- Advertisement -

Trending News