வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

அதிக ஹைப் ஏற்றிய லியோ.. லியோ படத்தில் இது எல்லாம் தவிர்த்து இருக்கலாம் லோகி

Leo Movie: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த லியோ படம் கடந்த 19ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இந்த படத்தின் ரிலீஸ் இந்திய அளவில் திருவிழா போல் கொண்டாடப்பட்டது. இதுவரை ரிலீஸ் ஆன இந்திய படங்களில் லியோ தான் அதிக வசூல் செய்த படமாக முதலிடத்தில் இருக்கிறது. லோகேஷ் மற்றும் தளபதி கூட்டணியில் விஜய் ரசிகர்களுக்கு ட்ரீட் வைத்திருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். விஜய் ரசிகர்கள் அப்பாற்பட்டு பொதுவான ஆடியன்ஸ்களுக்கு படத்தில் நிறை குறைகள் இருக்கின்றன.

லியோவுக்கு மிகப்பெரிய ஹைப் கொடுத்தது மல்டி ஸ்டார்ஸ் கூட்டணி தான். கௌதம் வாசுதேவ் மேனன், மிஸ்கின், அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், த்ரிஷா, பிரியா ஆனந்த் என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே இருந்தது. ஆனால் அத்தனை கேரக்டர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதா என்று கேட்டால் அது கேள்விக்குறியாக தான் இருக்கிறது.

சாண்டி சின்ன கேரக்டராக இருந்தாலும் பக்காவாக நடித்திருந்தார். இவரை இன்னும் சில காட்சிகளில் காட்டி இருக்கலாம் என்பது ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது. அதேபோல் நிறைய ஸ்டார்கள் இருந்ததால் படம் முழுக்க எல்லா கேரக்டருமே அறிமுகத்தோடு அப்படியே முடிந்து விட்டது போல் இருந்தது. பெற்ற மகளையும், மகனையும் பலி கொடுக்க நினைக்கும் சஞ்சய் தத் மருமகளையும், பேர குழந்தையையும் காப்பாற்றுவது கொஞ்சம் கிரிஞ்சாக இருந்தது.

சின்ன சின்ன கேரக்டர்களுக்கு எல்லாம் பெரிய நட்சத்திரங்களை நடிக்க வைத்ததால் தான் ரசிகர்களுக்கு அதிக எதிர்பார்ப்பு இருந்து நடக்காமல் போனது போல் தெரிகிறது. மன்சூர் அலிகானுக்கு ஃபிளாஷ்பேக் சொல்லுவது மட்டும்தான் வேலை என்பது போல் வசனம் கொடுக்கப்பட்டிருந்தது. அதை தாண்டி ரசிகர்கள் அவரிடம் இன்னும் நல்ல நடிப்பை எதிர்பார்த்து இருந்தார்கள். அதேபோன்று ஒரே சீனில் வரும் மடோனா செபாஸ்டின் பெரிய ஏமாற்றம்.

லியோ தாசின் மாஸ் நடிப்பை பார்க்க காத்திருந்தவர்களுக்கு பார்த்திபனின் கிளாஸ் நடிப்பு ட்ரீட்டாக அமைந்தது. ஆனால் படம் ஆரம்பத்தில் இருந்தே பார்த்திபன் தான் லியோ என்ற கெஸ்ஸிங் ஆடியன்ஸ்க்கு இருந்ததால் அதில் ஒரு சுவாரஸ்யம் இல்லாமல் போனது. அதேபோல் விஜய் த்ரிஷாவின் மகனாக வரும் கேரக்டருக்கு எந்த ஒரு டச்சும் இல்லாமல் இருக்கிறது.

தமிழ் சினிமாவில் மல்டி ஸ்டார் கூட்டணி என்பது லோகேஷால் மீண்டும் ட்ரெண்டானது. ஆனால் அவருடைய படங்களுக்கும், மல்டி ஸ்டார் கூட்டணிக்கும் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. அந்த எதிர்பார்ப்போடு தியேட்டர்களுக்கு வருபவர்களுக்கு பெரிய நட்சத்திரங்கள் எல்லாம் குட்டி குட்டி ரோலில் நடித்துவிட்டு போவது பெரிய ஏமாற்றமாக இருக்கிறது.

- Advertisement -

Trending News