90ஸ் கிட்ஸ் ஃபேவரிட் சீரியலை களம் இறக்கும் சேனல்.. ஹீரோவாக என்டரி கொடுக்கப் போகும் நடிகர்

90s kids favorite serial: எதுல போட்டி இருக்கோ இல்லையோ, மக்களுக்கு பிடித்தமான சீரியல்களை கொண்டு வருவதில் ஒவ்வொரு சேனல்களும் போட்டி போட்டு வருகிறது. அந்த வகையில் இப்பொழுது வரை சன் டிவி முதலிடம், இரண்டாவதாக விஜய் டிவி, மூன்றாவது இடத்தில் ஜீ தமிழ் இடம் பிடித்திருக்கிறது. ஆனால் எப்படியாவது முன்னுக்கு போக வேண்டும் என்று விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் சன் டிவியுடன் மோதிக் கொண்டு வருகிறார்கள்.

அதனால் ஜீ தமிழ் தற்போது புதிய யுத்தியை பாலோவ் பண்ண போகிறார்கள். அதாவது டப்பிங் சீரியல்களுக்கு மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது. அதிலும் ஒரு காலத்தில் உள்ளம் கொள்ளை போகுதே என்ற டப்பிங் சீரியல் பாலிமர் சேனலில் ஒளிபரப்பு செய்து மக்களின் ஃபேவரிட் நாடகமாக இடம் பிடித்தது.

90ஸ் கிட்ஸ் ஃபேவரிட் சீரியல்

அந்த வகையில் இந்த சீரியலை மறுபடியும் டப்பிங் செய்து ஒளிபரப்ப ஜீ தமிழ் முடிவெடுத்து இருக்கிறது. அதாவது தொழிலதிபரான ராம் என்பவர் நடுத்தர வர்க்க பெண்ணின் பிரியாவை மணந்து கொள்ள நிர்பந்தம் ஆகிறது. பின்னர் இருவரும் எப்படி அவர்களுக்குள் இருக்கும் காதலை பரிமாறிக் கொண்டு மனம் ஒத்தும் தம்பதிகளாக வாழ்கிறார்கள் என்பதுதான் அந்த நாடகத்தின் கதையாக இருந்தது.

அதை மறுபடியும் மக்களுக்கு காட்டுவதற்காக ஜீ தமிழ் களம் இறங்கி இருக்கிறது. இதில் ஹீரோவாக நடிகர் ஜெய் ஆகாஷ் என்டரி கொடுக்கப் போகிறார். இவர் ஏற்கனவே ஜீ தமிழில் நீ தானே என் பொன்வசந்தம் சீரியலில் ஹீரோவாக நடித்து அனைவரையும் கவர்ந்திருக்கிறார். அதே மாதிரி இவருக்கு ஜோடியாக ரேஷ்மா நடிக்க போகிறார்.

இவரும் ஜீ தமிழில் பூவே பூச்சுடவா, அபி டெய்லர் போன்ற நாடகங்களில் நடித்திருக்கிறார். இதனை தொடர்ந்து சமீபத்தில் பாதியிலேயே இழுத்து மூடிய கிழக்கு வாசல் சீரியலிலும் ஹீரோயினாக நடித்திருக்கிறார். அப்படிப்பட்டவருக்கு முக்கியமான நாடகத்தில் மறுபடியும் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

பொதுவாக ஜெய் ஆகாஷ் நடித்த நீ தானே என் பொன்வசந்தம் சீரியல் கிட்டத்தட்ட அப்படித்தான் அமைந்திருக்கும். அதனால் இவர்களுடைய ஜோடி மற்றும் கதை மக்களுக்கு ஒரு பொழுதுபோக்காக அமையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இதனால் இந்த நாடகத்தின் மீதான எதிர்பார்ப்பு மக்களிடம் அதிகம் காணப்படுகிறது. கூடிய விரைவில் எப்பொழுது எந்த நேரத்தில் ஒளிபரப்பு செய்யப்படும் என்ற அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார்கள்.

- Advertisement -