உயிரோடு இருக்கும் வரை தான் மரியாதை.. இறந்த பின்பு கண்டு கொள்ளாத டாப் நடிகர்கள்

Actor Surya: பொதுவாக ஹீரோக்களை வளர்த்து விட்டவர்களை எப்போதும் நன்றி கடனுடன் பார்க்க வேண்டும். இந்த விஷயத்தில் ரஜினி, கமலை அடிச்சுக்க முடியாது. எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போது பாலச்சந்தருக்கு நன்றி கூறிக் கொண்டே இருப்பார்கள். ஆனால் சில நடிகர்கள் தங்களது கடமையில் இருந்து விலகி விடுகின்றனர்.

அதாவது சூர்யா இப்போது மிகப்பெரிய உயரத்தில் இருக்கிறார். இப்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். அதோடு மட்டுமல்லாமல் சூர்யாவின் பிறந்த நாளான ஜூலை 23ஆம் தேதி அவரின் 43 வது பட அப்டேட் வெளியாக இருக்கிறது. இவ்வாறு சினிமாவில் படு பிஸியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் சூர்யா.

Also Read : சரவெடியாக வரவுள்ள சூர்யாவின் 43-வது பட அறிவிப்பு.. மீண்டும் இணையும் வெற்றி கூட்டணி

ஆனால் இப்போது அவர் செய்திருக்கும் காரியம் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. அதாவது தன்னை வளர்த்து விட்டவர்களை எப்போது மறக்க கூடாது. அதில் எப்போதுமே சூர்யாவும் நன்றி கடனுடன் இருக்கக் கூடியவர் தான். அப்படிதான் தன்னை ஏற்றிவிட்ட பாலாவுக்கு பட வாய்ப்பு கொடுத்து இருந்தார்.

ஆனாலும் படப்பிடிப்பில் ஏற்பட்ட மிகப்பெரிய பிரச்சனை காரணமாக தான் பாலா படத்தில் இருந்து சூர்யா விலகினார். ஆனால் இப்போது சூர்யா ஒரு திருமண விழாவில் கலந்து கொள்ளாதது மிகப்பெரிய வேதனையை அளிக்கிறது. அதாவது பிரபல இயக்குனர் கே வி ஆனந்த் சூர்யாவை வைத்து அயன், மாற்றான், காப்பான் போன்ற படங்களை இயக்கியிருந்தார்.

Also Read : பாலிவுட் மோகத்தில் லாபம் பார்க்க துடிக்கும் 4 நடிகர்கள்.. சுதா கொங்காரா வைத்து வலை விரிக்கும் சூர்யா

அதில் சூர்யாவுக்கு மிகப்பெரிய பிரேக் கொடுத்த படம் என்றால் அயன் படம் தான். இந்நிலையில் கேவி ஆனந்த் கடந்த 2021 ஆம் ஆண்டு கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார். இவருக்கு சினேகா மற்றும் சாதனா என்று இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். சமீபத்தில் கேவி ஆனந்தின் மகளுக்கு திருமணம் நடைபெற்றது.

இதில் சூர்யா மற்றும் தனுஷ் கலந்து கொள்ளாதது சினிமா வட்டாரத்தில் மிகப்பெரிய பிரளயத்தையே ஏற்படுத்துகின்றது. ஏனென்றால் இயக்குனர் உயிரோடு இருக்கும்போது வராமல் இருந்தால் கூட பரவாயில்லை, அவர் இல்லாதபோது கண்டிப்பாக வந்திருக்க வேண்டும். சூர்யா, தனுஷ் போன்ற நடிகர்களை பலரும் சாடி வந்தனர்.

Also Read : தனுஷ், சிம்பு வேண்டவே வேண்டாம்.. ரீமேக் படங்களை ஒதுக்கி 27 அவார்டுகளை குவித்த இயக்குனர்

Next Story

- Advertisement -