சரவெடியாக வரவுள்ள சூர்யாவின் 43-வது பட அறிவிப்பு.. மீண்டும் இணையும் வெற்றி கூட்டணி

Actor Surya: சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் அடுத்த படத்தில் சூர்யா கவனம் செலுத்த இருக்கிறார். இந்நிலையில் கங்குவா படத்திற்கு பிறகு வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் தான் சூர்யா நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் வெற்றிமாறனின் விடுதலை படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார். ஆகையால் இன்னும் சில மாதங்கள் விடுதலை 2 படப்பிடிப்பு நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகையால் வாடிவாசலுக்கு முன்பே தனது 43வது படத்தில் சூர்யா நடிக்க இருக்கிறாராம். அதற்கான அப்டேட் அவரது பிறந்தநாளன்று வெளியாக இருக்கிறது.

Also Read : பாலிவுட் மோகத்தில் லாபம் பார்க்க துடிக்கும் 4 நடிகர்கள்.. சுதா கொங்காரா வைத்து வலை விரிக்கும் சூர்யா

வருகின்ற ஜூலை 23ஆம் தேதி சூர்யா தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இந்த நாளில் மீண்டும் வெற்றிக் கூட்டணியான சுதா கொங்கரா, சூர்யா, ஜிவி பிரகாஷ் கூட்டணியில் சூர்யா 43வது படம் உருவாக உள்ள வெளியாக இருக்கிறது. ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் சூரரைப் போற்று படம் வெளியானது.

ஏர் டெக்கான் கோபிநாத்தின் கதையை தழுவி இப்படம் எடுக்கப்பட்டது. இப்படம் ஓடிடியில் வெளியானாலும் ஏக போக வரவேற்பை பெற்றது. ஆகையால் இப்படத்தை பாலிவுட்டில் ரீமேக் செய்து வருகிறார் சுதா கொங்கரா. இந்த படத்தை சூர்யா தயாரிப்பதோடு ஒரு சின்ன கேமியோ தோற்றத்திலும் நடிக்கிறாராம்.

Also Read : ஆதி புருஷால் வந்த சுதாரிப்பு.. சிறுத்தை சிவாவுக்கு வார்னிங் கொடுத்த சூர்யா

அதோடு மட்டுமல்லாமல் சூரரைப் போற்று படத்திற்கு கிட்டத்தட்ட ஐந்து தேசிய விருதுகள் கிடைத்தது. இந்நிலையில் மீண்டும் இதே கூட்டணி இணைய உள்ள செய்தி சூர்யா ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது. இந்த படமும் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து தான் எடுக்கப்பட உள்ளதாம்.

மேலும் சூர்யா பிறந்தநாள் அன்று கங்குவா படத்தின் அப்டேட்டும் வர இருக்கிறது. ஆகையால் அவரது ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக அந்த நாள் அமைய இருக்கிறது. மேலும் சூர்யா பாலிவுட்டிலும் கதாநாயகனாக ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாக இருக்கிறது. அதைப் பற்றிய செய்தியும் விரைவில் வெளிவரும்.

Also Read : மேடையிலேயே கண்கலங்கிய சிவகுமார்.. நிமிர்ந்து கூட பார்க்க முடியாமல் தலை குனிந்த கார்த்தி, சூர்யா

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்