தனுஷ், சிம்பு வேண்டவே வேண்டாம்.. ரீமேக் படங்களை ஒதுக்கி 27 அவார்டுகளை குவித்த இயக்குனர்

Director Avoid Remake Movies: இயக்குனர்கள் பொறுத்தவரை ரசிகர்களின் வரவேற்பு எந்த ஹீரோக்கு அதிகமாக இருக்கிறதோ அவர்களை வைத்து படத்தை எடுத்தால் பெரிய அளவில் லாபத்தை சம்பாதித்து விடலாம், அதே நேரத்தில் அவர்கள் எடுக்கக்கூடிய படங்களும் ஹிட் ஆகிவிடும். என்ற சிந்தனை தான் அவர்களுக்கு எப்பொழுதும் இருக்கும்.

ஆனால் இதற்கெல்லாம் விதிவிலக்காக ஒரு இயக்குனர், நான் எடுக்கக்கூடிய படங்களுக்கு பெரிய ஹீரோவை வேண்டாம். அதே நேரத்தில் வளர்ந்து வரும் தனுஷ், சிம்பு போன்ற நடிகர்களும் எனக்கு வேண்டவே வேண்டாம் என்று அவர்களை ஒதுக்கி இருக்கிறார். அப்படிப்பட்ட இயக்குனர் யார் என்றால் ஆல்பம் படத்தை எடுத்த இயக்குனர் வசந்த பாலன்.

Also read: இந்த பூனையும் பால் குடிக்குமா? 12 மணிக்கு நடிகைக்கு போன் செய்த தனுஷ்

இப்படத்தை தொடர்ந்து வெயில், அங்காடித் தெரு, அரவான், காவியத் தலைவன், ஜெயில் போன்ற படங்களை எடுத்திருக்கிறார். மேலும் தற்போது இவர் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடிப்பில் அநீதி திரைப்படம் இன்னும் இரு தினங்களில் ரிலீஸ் ஆக இருக்கிறது. இவர் எடுக்கக்கூடிய ஒவ்வொரு படங்களும் இவருடைய தனித்துவமான படங்களாக இருக்கும்.

அத்துடன் இவருடைய படத்தை பார்த்துட்டு போகிற ரசிகர்களுக்கு ஏதாவது ஒரு கருத்தை முன்னிறுத்தி காட்ட வேண்டும் என்பது தான் இவருடைய நோக்கமே. அதற்காக எதார்த்தமான கதைகளை எடுத்து அந்த கதைக்கு தேவையான முகபாவனை கொண்ட நடிகர்களை நடிக்க வைப்பார்.

Also read: ஏழு மாதங்களாக ஏங்கி கிடக்கும் சிம்பு.. செகண்ட் இன்னிங்ஸ் கேரியருக்கு வரப் போகும் பெரிய ஆபத்து

ஆனால் இவர் கதையை கேட்ட தயாரிப்பாளர்கள் பலரும் பெரிய ஹீரோக்களை வைத்து எடுப்பதற்கு சிபாரிசு செய்திருக்கிறார்கள். ஆனால் அதையெல்லாம் வேண்டாம் என்று அவர்களை ஒதுக்கிவிட்டு புது ஹீரோகளுக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறார். அப்படி இவர் நினைத்தபடி எடுத்த படங்கள் மூலம் கிட்டத்தட்ட 27 அவார்டுகளை வாங்கி குவித்திருக்கிறார்.

தற்போது பல நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் வாண்டட் லிஸ்டில் இருக்கிறார். அத்துடன் இவரிடம் இருக்கும் மிகப்பெரிய சிறப்பே எந்த ரீமேக் படத்தையும் எடுக்காமல், இவருடைய சொந்த ஸ்டைலிலே கதையை உருவாக்குவது தான். இப்படிப்பட்ட இயக்குனர் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம்.

Also read: சைக்கோ ஹீரோவாக அவதாரம் எடுத்த அர்ஜுன் தாஸ்.. கொலைவெறியுடன் வெளியான ட்ரெய்லர்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்