கேஆர் விஜயா தயாரித்து லாபம் பார்த்த ஒரே படம்.. சூப்பர் ஸ்டாரால் கிடைத்த வெகுமதி

Actor Rajini: எம்ஜிஆர், சிவாஜி போன்ற முன்னணி நடிகர்களுடன் அதிக படங்களில் ஜோடி போட்டு நடித்தவர் கேஆர் விஜயா. சினிமாவில் இவருடைய பயணம் நீண்ட நெடுங்காலமாக இருந்து வருகிறது. கிட்டத்தட்ட 320 க்கும் மேற்பட்ட படங்களில் கேஆர் விஜயா நடித்துள்ளார். இப்போதும் சினிமாவில் கே ஆர் விஜயா தனது பங்களிப்பை கொடுத்து வருகிறார்.

அந்த வகையில் ரவி பார்க்கவன் இயக்கத்தில் மூத்தகுடி என்ற படம் உருவாகி வருகிறது. உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் இப்படத்தில் கேஆர் விஜயா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறாராம். இந்நிலையில் ரஜினியால் கேஆர் விஜயா ஒரு படத்தில் லாபம் பார்த்து இருக்கிறார்.

Also Read : குடித்தே சாவை தேடிக்கொண்ட 9 திரை பிரபலங்கள்.. ஒரு கோடி செலவு செய்து உயிர் தப்பிய ரஜினி

அதாவது நடிகையாக தனது பங்களிப்பை திறம்பட கொடுத்துள்ளார் கே ஆர் விஜயா. சாமி வேடம், கதாநாயகி, அம்மா, பாட்டி என எது கொடுத்தாலும் பின்னி பெடல் எடுத்து விடுவார். மேலும் கே ஆர் விஜயாவுக்கு படத்தை தயாரிக்க வேண்டும் என்ற ஆசையும் வந்திருக்கிறது.

அதுவும் அவர் தயாரித்த முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட்டாகி இருக்கிறது. அதாவது 1979 ஆம் ஆண்டு யோகானந்த் இயக்கத்தில் சிவாஜி, ரஜினி, கே ஆர் விஜயா, பண்டாரிபாய், மேஜர் சுந்தர்ராஜன் மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் நான் வாழவைப்பேன். இந்த படம் வெளியாவதற்கு முன்புதான் ரஜினி நன்றாக சினிமாவில் வளர்ந்து கொண்டு இருந்தார்.

Also Read : கமல், கவுண்டமணி காம்போவில் அசத்திய 5 படங்கள்.. வசூலில் ரஜினியை பின்னுக்கு தள்ளிய இந்தியன்

இதை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட கே ஆர் விஜயா ரஜினியை தனது படத்தில் நடிக்க வைத்து நல்ல லாபம் பார்த்துக் கொண்டார். நான் வாழவைப்பேன் படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வரவேற்பை பெற்றிருந்தது. மேலும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி நான் வாழவைப்பேன் படம் 1974 ஆம் ஆண்டு அமிதாப்பச்சன் மற்றும் பர்வீன் பாபி நடிப்பில் வெளியான மஜ்பூர் படத்தின் ரீமேக் தான். பாலிவுட்டில் இப்படம் அப்போதே 2 கோடியை தாண்டி வசூல் செய்திருந்தது. அதனால்தான் கே ஆர் விஜயா இப்படத்தை தமிழில் எடுத்து நல்ல லாபம் பார்த்திருக்கிறார்.

Also Read : ரஜினி போல் சம்பளம் குறைக்கப்பட்ட மாஸ் ஹீரோ.. தொடர்ந்து ரெண்டு பிளாப் படத்தினால் ஏற்பட்ட பெரிய தலை வலி

- Advertisement -