ரஜினி போல் சம்பளம் குறைக்கப்பட்ட மாஸ் ஹீரோ.. தொடர்ந்து ரெண்டு பிளாப் படத்தினால் ஏற்பட்ட பெரிய தலை வலி

Simbu: ரஜினி போல் மாஸ் ஹீரோ ஒருவரும் தன்னுடைய சம்பளத்தை வெகுவாக குறைத்துள்ளார். அடுத்தடுத்து வெளிவந்த படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெறாததால் இந்த ஒரு சிக்கலில் அவர் மாட்டி இருக்கிறார். நடிகர் சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்த மாநாடு திரைப்படம் வெற்றி பெற்று 100 கோடி தாண்டி வசூல் செய்தது. அதைத்தொடர்ந்து வெந்து தணிந்தது காடு என்ற படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடித்திருந்தார், சிம்புவிற்கு ஆவரேஜ் மூவியாக இருந்த போதிலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது இத்திரைப்படம்.

அதனால் இதுவரை தான் 20 கோடி முதல் 25 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கி வந்த சிம்பு 40 கோடியாக தன் சம்பளத்தை உயர்த்தினார் என்றது கோலிவுட் வட்டாரம். விஜயின் மாஸ்டர் படத்தை தயாரித்த தயாரிப்பாளர் லலித் குமார் சிம்புவிடம் தனது அடுத்த படத்தில் நடிக்குமாறு கேட்டு அணுகினார். ஆனால் சிம்புவின் சம்பள கோரிக்கையை கேள்விப்பட்ட லலித் குமார் ஷாக்காகி விட்டாராம்.

Also read: கமலின் பல நாள் ஈகோ.. ஜெயிலரில் காத்திருக்கும் ரஜினியின் தரமான சம்பவம்

சிம்பு சில வருடங்களுக்கு முன்பு பட வாய்ப்புகள் அதிகம் இல்லாமல் தவித்து வந்த நிலையில் இப்போது பட வாய்ப்புகள் குவிந்த உடன் சம்பளத்தை உயர்த்துவது கோடிகளை நம்பி வாய்ப்புகளை தவற விடுகிறார் என்றும், வரும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டால் மட்டுமே சிம்பு உச்சத்தை எட்ட முடியும் என்றும் திரையுலகினரின் கருத்தாக உள்ளது.

அதன் பின் ஒபிலி என் கிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்த பத்து தல என்ற கேங்ஸ்டர் திரைப்படத்தில் நடித்த சிம்பு, படம் சிறப்பாக பேசப்படாததால் வசூல் ரீதியாகவும் தோல்வி அடைந்தது. இதற்கிடையில் கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் சிம்பு.

Also read: பல கோடிகளில் புரளும் முதல் 8 நடிகர்கள்.. சூர்யாவை விட அதிக சம்பளம் வாங்கும் சிவகார்த்திகேயன்

ரூபாய் 100 கோடி பட்ஜெட்டில் தயாரிக்க கமல் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில் சிம்புவிற்கு இரு வேடங்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது. சிம்பு பத்து தல படத்தின் மூலம் சரிந்த தன் மார்க்கெட்டை இப்படத்தில் பிடித்து விடதனது சம்பளத்தை குறைத்துக் கொண்டுள்ளதாக தெரிகிறது.

காலா, கபாலி, தர்பார், அண்ணாத்த என ரஜினிக்கு அடுத்தடுத்த படங்கள் ஹூட் ஆகாததாலும், அதிலும் குறிப்பாக அண்ணாத்த பணத்திற்கு அப்புறம் அவர் மாஸ் குறைந்ததாலும், தன் சம்பளத்தை குறைத்துக் கொண்ட ரஜினி போல சிம்புவும் தொடர்ந்து இரண்டு படங்கள் சரியாக வெற்றி பெறாத காரணத்தினால் அடுத்தடுத்து வரும் படங்களில் சம்பளத்தை உயர்த்திக் கொள்ளலாம் என்று முடிவு செய்து தற்சமயம் தன் சம்பளத்தை குறைத்து இருக்கிறார் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

Also read: அதிக வரவேற்பை பெற்ற 5 சின்ன பட்ஜெட் படங்கள்.. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது

 

Next Story

- Advertisement -